200 யூனிட் இலவச மின்சாரம் : அனைவருக்கும் பொருந்துமா?

Published On:

| By Kavi

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதும் 200 யூனிட் இலவச மின்சாரம் கோப்பில் தனது முதல் கையெழுத்தை இட்டார். 

அதாவது, இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு இரு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் கோப்பில் முதல்வர் விஜய் கையெழுத்திட்டார். 

ADVERTISEMENT

மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் முக்கிய திட்டமாக இது கருதப்பட்டாலும், யார் யாருக்கு இந்த சலுகை பொருந்தும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

தமிழக வெற்றி கழகம் தேர்தல் அறிக்கையில், தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ADVERTISEMENT

ஆனால் தற்போது 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் இலவசம் மின்சாரம் என்பது  பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

முன்னதாக 100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பது தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட வரும் திட்டமாகும்.

ADVERTISEMENT

எனவே தற்போது 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு முந்தைய 100 யூனிட் இலவசம் மின்சார திட்டம் பொருந்துமா இல்லையா என்பது குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

முன்னதாக 100 யூனிட் இலவசம் மின்சாரத்துக்கு மானிய செலவு 7,752 கோடி ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share