வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 124 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா தொற்று பாதிப்பு 2022 ஆம் ஆண்டு குறைந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர்.
ஆனால் கடந்த ஒரு மாத காலமாகச் சீனாவில் பிஎஃப்-7 கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியது.
சீனாவில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பாதிப்புகளை ஏற்படுத்திய பிஎஃப்-1 ஒமிக்ரான் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் தொற்று பரவ தொடங்கியது.
பிஎஃப்-7 வகை கொரோனா தொற்று இந்தியாவிலும் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. பின்னர் பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது.
கொரோனா பரிசோதனை மேற்கொள்வது மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என்பது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 3ம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 19,227 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 124 பேருக்கு ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 124 பேரில் 40 பேருக்கு பிஎஃப்-7 ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 14 பேருக்கு எக்ஸ்பிபி வகை, 9 பேருக்கு பிக்யூ வகை, 2 பேருக்கு பிஏ 5.2 வகை போன்ற கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மோனிஷா
டாஸ்மாக் நேரத்தை மாற்றியமைக்க நீதிபதிகள் பரிந்துரை!
டிஜிட்டல் பயணத்தில் இந்தியாவுக்கு உதவுவோம் : மைக்ரோசாஃப்ட் சிஇஓ!
