தமிழ்நாட்டில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். 10 new colleges
உயர்க்கல்வித் துறைக்கு பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்!
குன்னூர், நத்தம், ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, முத்துப்பேட்டை, திருவிடைமருதூர், பெரம்பலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 10 புதிய கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும்.
ஆசியாவிலேயே தலைசிறந்த பல்கலையாக அண்ணா பல்கலை கழகத்தை மாற்றிட ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
அரசு பொறியியல் கல்லூரிகளில் ஏஐ உள்ளிட்ட நவீன தகவல் தொழில்நுட்பப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். ஏஐ உள்ளிட்ட துறைகளில் புதிய பட்டய மற்றும் பட்டப்படிப்புகள் உருவாக்கப்படும். வளர்ந்து வரும் துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் உருவாக்கப்படும்.
கலை, அறிவியல் கல்லூரிகளில் மேலும் 15,000 இடங்கள் அமைக்கப்படும். 10 new colleges