சைபர் கிரைம் டிஜிபியாக பாலநாக தேவி நியமனம்! 10 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

Published On:

| By Kavi

சைபர் கிரைம் டிஜிபியாக பால நாக தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். 

ADVERTISEMENT

இன்று 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

உளவுத் துறை டிஜிபியாக இருந்த பாலநாக தேவி  சைபர் கிரைம் டிஜிபியாக  நியமிக்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

வேலூர் சரக டிஐஜி-யாக இருந்த தர்மராஜன் சென்னை உளவுத்துறை (பாதுகாப்பு) டிஐஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சட்டம் – ஒழுங்கு (தெற்கு மண்டலம்) இணை ஆணையராக இருந்த பகெர்லா செபாஸ் கல்யாண் சென்னை உளவுத்துறை (உள்நாட்டு பாதுகாப்பு) டிஐஜி-யாக மாற்றப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

திருநெல்வேலி சரக டிஐஜி-யாக இருந்த சரவணன் சென்னை சிஐடி (CID) உளவுத்துறை டிஐஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட எஸ்பி-யாக இருந்த கராட் கருண் உத்தவ்ராவ் சென்னை ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு எஸ்பி-யாக மாற்றப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்ட எஸ்பி-யாக இருந்த மயில்வாகனன் சென்னை ஸ்பெஷல் பிரான்ச் CID (I) எஸ்பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி-யாக இருந்த மதன் சென்னை செக்யூரிட்டி பிரான்ச் CID (I) எஸ்பி-யாக மாற்றப்பட்டுள்ளார்.

‘Q’ பிரிவு சிஐடி எஸ்பி-யாக இருந்த சண்முகம் ஸ்பெஷல் பிரான்ச் CID (II) எஸ்பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மெட்ரோ மண்டல குற்றப் பிரிவு சிஐடி எஸ்பி-யாக இருந்த மாதவன் சென்னை செக்யூரிட்டி பிரான்ச் CID (II) எஸ்பி-யாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை சட்டம் – ஒழுங்கு ஏஐஜி-யாக இருந்த  சிலம்பரசன்  சென்னை ஸ்பெஷல் பிரான்ச் CID (ஸ்பெஷல் டிவிஷன்) எஸ்பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share