ADVERTISEMENT

கேஸ் போடுங்க: வைகோ

Published On:

| By Balaji

புதுச்சேரி மாநிலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் குணசேகரனை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், ‘தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு, திமுக-வைச் சேர்ந்தவர்கள் நடத்தும் ‘எலைட் டிஸ்டில்லரிஸ்’, ‘எஸ்ஸன்சர்’ என்ற மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து ரூ.24 ஆயிரம் கோடிக்கு கொள்முதல் செய்துள்ளனர். இதற்கு 15 சதவிகிதம் அதிமுக-வுக்கு கமிஷன் கொடுத்துள்ளனர். அதேபோல, இதற்குமுன்பு திமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பத்தினருக்குச் சொந்தமான ‘மிடாஸ்’ மதுபானம் தயாரிக்கும் நிறுவனத்திடமிருந்து ரூ.20 ஆயிரம் கோடிக்கு மதுபாட்டில்கள் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் 15 சதவிகிதம் திமுக-வுக்கு கமிஷன் கொடுக்கப்பட்டது. இரண்டு கட்சிகளும் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள். இதனை நான் ஆதாரத்துடன் கூறுகிறேன். கலைஞர் பற்றி தவறாக ஒரு வார்த்தை சொல்லிவிட்டேன் அதற்கு மன்னிப்புக் கேட்டேன். இதற்கு நான் மன்னிப்பு எல்லாம் கேட்கமாட்டேன். இது தவறு என்றால் இரு கட்சிகளும் என் மீது கேஸ் போடட்டும். இல்லாவிட்டால், இந்த உண்மையை ஒப்புக்கொள்ளட்டும்’ என்று வைகோ பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share