டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து மேற்கு வங்க மாநிலத்தில் நடத்திய கருத்துகணிப்பின் முடிவுகளை நேற்று வெளியிட்டுள்ளது. இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 160 தொகுதிகளை கைப்பற்றும். இடதுசாரிகள் 106 அல்லது அதற்கு சற்று அதிகமான தொகுதிகளிலும், காங்கிரஸ் 21 தொகுதிகளைம், பா.ஜ.க. 4 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வாக்கு சதவீதத்தைப் பொறுத்த வரை, திரிணாமுல் காங்கிரஸ் 40 சதவீத வாக்குகளையும், இடதுசாரிகள் 31 சதவீத ஓட்டுகளையும், பா.ஜ.க. 11 சதவீத வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
