வேட்டி அணிந்து வந்த மாணவரை பெயிலாக்கிய சென்னைப் பல்கலைக்கழகம்

Published On:

| By Balaji

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோனஸ் ஆன்டன் புளேந்தரசா என்பவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறையில் எம்.ஏ. படித்துவருகிறார். . சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உயர்மட்ட அதிகாரிகளைக் கேள்வி எழுப்பியதுபற்றி செய்திகள் வெளியானதால் கவனத்தைப் பெற்றார்.

இவர், நேற்று திடீரென்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறைத்தலைவர் அறைக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் இந்தப் போராட்டத்துக்கான காரணம் குறித்து “தமிழ் கலாச்சாரத்தின்மீது இருந்த ஈர்ப்பால், அதைப் பின்பற்றும் வகையில் வகுப்புக்கு வேட்டியணிந்து சென்றேன். ஆனால் கவுரவ விரிவுரையாளர் மீரா கங்குலி அவருடைய வகுப்பின்போது, “வேட்டி கட்டுவது நன்றாக இல்லை” என்றுகூறி, என்னை மாணவர்களின் முன்னிலையில் அவமதித்தார்.இதை நான் துறைத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு சென்ற போது தமிழ் கலாச்சார ஆடையான வேட்டியை வகுப்புக்கு அணிந்து வரலாம் என்று அனுமதித்தனர். இந்நிலையில், ஜோனஸ் ஆன்டன் புளேந்தரசா போதுமான வருகைப் பதிவோடு, செமஸ்டர் அகமதிப்பீட்டுத் தேர்வை எழுதியதில், மீரா கங்குலி கற்பித்த சர்வதேச உறவுகள் கோட்பாடுகள் பாடத்தில் ஃபெயிலானதால் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும் அவர், ஃபெயிலானதற்கான காரணம் குறித்து கேட்டபோது, நீங்கள் இரண்டாவது அகமதிப்பீட்டுத் தேர்வில் ஃபெயிலாகி உள்ளீர்கள் என்று விளக்கம் அளித்துள்ளனர். இதனால், பல்கலைக்கழக விதிப்படி அகமதிப்பீட்டுத் தேர்வில் ஃபெயிலானால் செமஸ்டர் தேர்வுக்கு அனுமதிக்கமுடியாது என்று கூறியுள்ளனர். பல்கலைக்கழக ஆசிரியர்களும் மென்திறன் பயிற்சி வகுப்புக்கு அனுமதிக்க மறுத்துள்ளதையும் குறிப்பிட்டார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக ஆசிரியர்களோ நிர்வாகமோ விளக்கம் அளிக்கவில்லை. தமிழகத்தில், அதிலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில், ஒரு வெளிநாட்டு மாணவர் வகுப்புக்கு வேட்டியணிந்து வந்ததற்காக அகமதிப்பீட்டுத் தேர்வில் ஆசிரியர்களால் ஃபெயிலாக்கப்பட்டிருப்பது, மாணவர்களிடையேயும், தமிழ் ஆர்வலர்களிடையேயும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share