வியட்நாமுக்கு ‘பிரம்மோஸ்’ வழங்குகிறது இந்தியா

Published On:

| By Balaji

இந்திய அரசு வியட்நாமுக்கு ‘பிரம்மோஸ்’ ஏவுகணையை ஏற்றுமதி செய்ய முடிவுசெய்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் பாரிக்கரின் வியட்நாம் பயணத்தின்போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது.

பிரம்மோஸ்:

ADVERTISEMENT

பிரம்மோஸ் ஆயுதம் இந்திய – ரஷ்ய கூட்டுத் தயாரிப்பாகும். இந்தியாவின் பிரம்மபுத்திரா – ரஷ்யாவின் மாஸ்கவ் நதி ஆகிய இரண்டின் பெயரையும் சேர்த்து பிரம்மோஸ் என பெயரிடப்பட்டுள்ளது. சுமார் 292 கி.மீ. வரை சென்று தாக்கும் திறனுடையது. துல்லியம், குறியைத் தாக்குதல் ஆகியவற்றுக்குப் பெயர்போன ஆயுதம். நொடிக்கு 340 கி.மீ. வேகத்திலும், மணிக்கு 1225 கி.மீ. வேகத்திலும் பாயக்கூடியது. விமானம், கடல், தரை வழி என மூன்று தளவாடங்களிலும் பயன்படும்வகையில் வெவ்வேறு வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 8.4 மீ நீளமும், 3.9 டன் எடையும் கொண்டது.

இந்தியா ஏன் கொடுக்கிறது?

ADVERTISEMENT

வியட்நாம் இந்தியாவின் நட்பு நாடாக அறியப்பட்ட தேசமாகும். 2011 காலகட்டத்திலிருந்தே பிரம்மோஸ் ஆயுதத்தின்மீது வியட்நாம் விருப்பம் தெரிவித்துவந்தது. தென்சீனக் கடலில் அதிகரித்துவரும் சீனாவின் ஆயுதப் பெருக்கத்தை சமாளிக்க வியட்நாம் ராணுவப்படையை வலுப்படுத்த வேண்டும் என வியட்நாம் விரும்புகிறது. 2014ல் வியட்நாம் பிரதமர் நியூஜன் தன் டங் இந்தியா வந்திருந்தபோது, நான்கு கடல் தளவாடங்களை தர இந்தியா ஒத்துக்கொண்டது. மேலும், கிழக்காசியா மற்றும் தென்கிழக்காசியாவில் சீனாவின் கை ஓங்கி வருகிறது. அந்தப் பகுதியில் இருக்கும் நாடுகளுடன் சீனா தொடர்ந்து ஆயுதப் பரிமாற்றம், வர்த்தகத்தில் உள்ளது. இந்நிலையில் கிழக்காசிய, தென் கிழக்காசியப் பகுதிகளில் இந்தியாவின் பிடியை பலப்படுத்த இந்த முயற்சிகள் இந்தியாவுக்கு உதவும். இந்தியா வியட்நாமுக்கு ஆயுதம் வழங்கும் திட்டத்தை சீனா தொடர்ந்து எதிர்த்துவந்தது. இதற்குமுன்பு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசு சீனாவின் ஆட்சேபணையைக் கருத்தில்கொண்டு வியட்நாமுக்கு பிரம்மோஸை வழங்காதது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share