‘வரலாற்று சிறப்புமிக்க மன்னிப்பு’ என இடது கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான அருணன், கருணாநிதி பற்றி தவறாக பேசியதற்கு வைகோ கேட்ட ‘மன்னிப்பு’ பற்றி குறிப்பிட்டார். ஆனால், தற்போது வைகோ இடது கம்யூனிஸ்ட் தலைவர் ஜி.ராமகிருஷ்ணனும், விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும், தம்மை மன்னிப்பு கேட்க வேண்டாம் என சொன்னதாக வைகோ தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் சார்பில் திமுக-வுக்கு ஒதுக்கப்பட்ட அரவக்குறிச்சியில் போட்டியிடுவேன் என மல்லுகட்டிய ஜோதிமணி பின்வாங்கல், அனைத்து கட்சிகளின் வேட்பாளர் மாற்றங்கள் இன்றைய அப்டேட் குமாரில்…
// @valasaipukazent
அரவக்குறிச்சியில் போட்டியிடல்லை. காங்கிரஸ் -திமுக வெற்றிக்குப் பாடுவேன் – ஜோதிமணி”
அதுல ஒருத்தர் நீங்க முதல்வராகணும்னு சொன்னாரே… அந்த ஆளைத்தான் தேடிகிட்டு இருக்கேன் //
//@maamallan
அழுதாலும் புரண்டாலும் அரசியல்வாதியா ஜோதிமணி கரெக்டாதான் முடிவெடுத்திருக்காங்க. ஞாநியாலதான் அட்வைஸ் குடுக்காம இருக்கமுடியல. பாவம் //
//@mekalapugazh
105 தொகுதி கிடைத்தும் மனைவிக்கும் மச்சானுக்கும் தொகுதி ஒதுக்கமுடியாத அளவுக்கு சீட்டுக்கு அடிதடி நடந்திருக்கிறது போல தேமுதிக-வில்… //
// @thoatta
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஒரு மாசத்துக்கு முன்னால நடந்திருந்தா அவரு நெத்தியிலும் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பாங்க.//
// @thoatta தேர்தலுக்கு 3 தொகுதி மாறி இருக்காரு கேப்டன் # சீட்டு கம்பெனி நடத்தி ஏப்பம் விடுறவன் கூட இம்புட்டு வேகத்துல ஏரியா மாறமாட்டான் //
// @ArunbalSrinivas
நாம் தமிழர் சீமான் மட்டும்தான் இன்னும் அறிவித்த வேட்பாளர் பட்டியலை மாத்தல, அதனால அவர் கெத்தாம்.
ஆள் வெய்டிங்க்ல இருந்தாதானடா மாத்த முடியும்.//
//ஜெயன் தேவா (தமிழினியின் கணவர்)
சென்னை துறைமுகத்தில் இறக்கப்பட்ட வணங்கா மண் பொருட்களுக்கு என்ன நடந்தது? யாரேனும் உண்மை தெரிந்தவர்கள் பதில் தாருங்கள்…//
// @ArunbalSrinivas
ஐந்து வருஷத்துக்கு ஒருக்கா மக்கள்கிட்ட இவங்க செய்யுற அரசியலை விட, இரண்டு மாத வேட்பாளர் பட்டியலைத் தயாரிப்பதில் அதிக அரசியல் இருக்கு. //
//@Aathithamilan
உளுந்தூர் பேட்டையில் விஜயகாந்த் டெபாசிட் இழப்பார் – ராமதாஸ்
#அப்படியே பாமக டெபாசிட் இழக்கும், அந்த இருநூற்று சொச்சத்தையும் சொல்லிடுங்க//
// @arattaigirl
வேட்பாளர்லாம் நாஞ்சொல்லணுமா? நீங்களே பாத்து ஓட்டு போடுங்க – கேப்டன். தட் தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றுமில்லை மொமண்ட்//
Sivasankaran Saravanan
கலைஞரை சாதிய ரீதியாக தான் பேசியதற்கு மன்னிப்பு எதுவும் கேட்கவேண்டாம் என்று தொல். திருமாவளவனும், ஜி.ராமகிருஷ்ணனும் தன்னிடம் சொன்னதாகவும், அதனால்தான் மன்னிப்பு கேட்டதாகவும் நேற்று மதுரையில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் வைகோ கூறியுள்ளார். (வைகோ பேசியதன் வீடியோ இணைப்பை கமென்ட் பகுதியில் தந்துள்ளேன்)
வைகோ-வின் வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. வைகோ-வின் இந்தப் பேச்சு குறித்து அண்ணன் திருமாவளவனும் ஜி.ஆரும் விளக்கம் அளிக்கவேண்டும். ஒருவேளை வைகோ சொன்னது உண்மையென்றால், சாதிய அத்துமீறல்களைப் பற்றிப் பேச திருமா-வுக்கும் ஜி.ஆருக்கும் எந்த அருகதையும் இல்லை என்பது போலாகிவிடும்…!
வைகோ-வின் மன்னிப்பு கடிதத்தை ஒரு ஆவணமாக வைக்கவேண்டும் என்று எழுதிய அருணன் உள்ளிட்ட அறிவுஜீவிகளும் அதேபோல ஷாநவாஸ் போன்ற விடுதலைச்சிறுத்தைகள் பிரமுகர்களும் சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து தக்க பதிலை பெற்றுத் தருவார்களா என்ற எதிர்பார்ப்பில் உள்ளேன்…! //
Jothimani Sennimalai
2011 கரூர் சட்டமன்றத் தேர்தலில் நான் காங்கிரஸ் -திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டபோது
கே.சி.பி அவர்களுடனான எனது புகைப்படத்தை தற்போதைய புகைப்படம்போல போட்டு, மலிவான பிரச்சாரத்தில் சில புத்திசாலிகள் ஈடுபட்டுள்ளனர். அஞ்சு வருஷம் பின்தங்கி இருக்கீங்க பாஸ். பாத்துக்குங்க. அரவக்குறிச்சி தொகுதியைப் பொறுத்தவரை என்னை வேட்பாளராக முன்னிறுத்தி ஒன்பது மாதக் காலம் வாக்குக் கேட்டுள்ளேன். இனி, இன்னொரு வேட்பாளருக்கு வாக்குக் கேட்பது அரசியல் அறம் ஆகாது. மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை கெடுக்கும். எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எதையும் என்னால் செய்ய இயலாது. ஆகவே, அரவக்குறிச்சி தொகுதியில் நான் பிரச்சாரம் செய்யப்போவது இல்லை. இது தொகுதியில் அனைவருக்கும் தெரியும். அதனால் படம் போடுவதை விட்டுவிட்டு உருப்படியான வேறு வேலைகள் இருந்தால் பாருங்கள்! மற்ற தொகுதிகளில், செயல்படாதத் தமிழகத்தை பின்னோக்கி அழைத்துப் போய்விட்ட அதிமுக அரசை அகற்ற காங்கிரஸ் – திமுக வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் செய்வேன். //,”









