சமீபத்தில் எல்லைதாண்டி மீன் பிடித்த தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்திய அரசின் நடவடிக்கைக்குப் பிறகு நேற்று முன்தினம் அவர்கள் காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர். இதையடுத்து நேற்று, ‘இலங்கை கடற்படையால், பறிமுதல் செய்யப்பட்ட எங்கள் படகுகளைத் திருப்பித்தர நடவடிக்கை எடுக்காவிட்டால், தேர்தலைப் புறக்கணிப்போம்’ என்று கூறினார்கள். இந்நிலையில், இலங்கை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி வந்து தவறு செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீனவர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக இலங்கை – இந்தியா அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் திருப்பி கொடுக்கப்படும்’ என்றவர், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
படகுகள் திரும்ப வழங்கப்படும்-இலங்கை அமைச்சர் சாமிநாதன்
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
