தொண்டர்கள்மீதான தாக்குதலை அனுமதிக்க மாட்டேன்: வைகோ

Published On:

| By Balaji

நேற்று முன்தினம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் கருணாநிதி குறித்து சாதிரீதியாக விமர்சித்துப் பேசினார். இதற்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. வைகோ-வின் பேச்சைக் கண்டித்து திமுக-வினர் தமிழகம் முழுவதும் வைகோ-வின் உருவபொம்மையை எரித்துப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து வைகோ, தன் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய குற்றமாகக் கூறி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தான் மன்னிப்புக் கேட்ட பிறகும், மதிமுக அலுவலகம்மீது தாக்குதல் நடைபெறுகிறது. திமுக மேலிட உத்தரவின்பேரில் எனது படம் செருப்பால் அடிக்கப்படுகிறது. எனது உருவபொம்மையை பாடையில் கட்டி சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள். 2 ஜி பற்றி பேசியதால், மதிமுக தொண்டர்கள்மீது திமுக-வினர் தாக்குதல் நடத்துகின்றனர். ஸ்டாலின் உத்தரவின்பேரில் எனது உருவ பொம்மை எரிக்கப்படுகிறது. என்னைத் தீ வைத்து எரித்தாலும் பொறுத்துக் கொள்வேன். ஆனால், தொண்டர்கள்மீதான தாக்குதலை அனுமதிக்கமாட்டேன்” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share