சென்னை பல்கலையில் நிதி முறைகேடு – விசாரணைக் குழு தேவை

Published On:

| By Balaji

சென்னை பல்கலைக்கழக செனட் கூட்டம் நூற்றாண்டு கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 2016 -17 கல்வி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்குப் பின் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும், இந்தக் கூட்டத்தில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு திட்டங்களுக்காக கடந்த 6 ஆண்டுகளில் எவ்வளவு நிதி பெறப்பட்டது? எந்த முறையில் செலவிடப்பட்டது? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நிதிமுறைகேடுகள் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை குழு அமைக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விடுதி, உணவகம், கழிப்பிடம், ஆய்வுக்கூடம் போன்ற வசதிகளை மேம்படுத்த வேண்டும். உள்விளையாட்டு அரங்கம் கட்டும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பேராசிரியர்கள் சுந்தரம், மணிவாசகம், ஜோதி சிவஞானம், ரவீந்திரன், சுந்தரம், கே.தமிழ்செல்வம் ஆகியோர் வலியுறுத்திப் பேசினார்கள். இதற்கு பேராசிரியர் தங்கம் மேனன் நிதிமுறைகேடு குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்படும் என்றார்.

ADVERTISEMENT
Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share