சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 60 . இதில் பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளன. இதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், வழக்கறிஞர் எம்.வி.முரளிதரன், பாரதிதாசன், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.எஸ். சுந்தர், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் கலையரசன், ஒய்வு பெற்ற செசன்ஸ் நீதிபதி கோகுல்தாஸ் ஆகிய ஆறு பேர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று வழங்கினார். இந்த உத்தரவு நகல் இன்று காலை கிடைத்தது. இவர்களின் பதவியேற்பு விழா வரும் ஏப்ரல் 7ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 6 நீதிபதிகள் நியமனம்
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
