காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரின் பல பகுதிகளை இணைத்து ஒரு பெரும் சென்னை மாநகராட்சியை தமிழக அரசு உருவாக்க செய்யும் முயற்சியில், அதன் வரலாறு சற்றே புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். சங்க காலத்தில் இருந்த தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாக சென்னை இருந்ததாக கூறப்படுகிறது. ஆராய்ச்சி குறிப்புகளின்படி, சென்னை குரும்பர் இனத்தவரின் இடமாகவும், முதலாம் நூற்றாண்டில் கரிகால சோழனின் ஆட்சியில் இருந்ததாகவும் தெரிகிறது. 2,000 ஆண்டுகளுக்கு மேலாக, தொண்டை மண்டலம், குரும்பர், சோழர், பல்லவர், பாண்டியர் என பல மன்னர்களின் ஆட்சியை கண்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில், தொண்டை மண்டலம் , அறுவநாடு மற்றும் அறுவ வடதலை நாடு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
வட பெண்ணாறில் இருந்து தென்பெண்ணாறு வரையிலான பகுதியை அறுவர்நொய் என அழைக்கப்பட்டதாக கூறுகிறார் கிரேக்க-எகிப்திய பயணியான தாலமி. கரிகால சோழன் மற்றும் நெடுமுடிகிள்ளியை வெற்றிகொண்ட தொண்டைமான் இளந்திரையன் ஆட்சியில், இந்த இருகரைப்பகுதிகளும் இணைந்த பகுதி, தொண்டை மண்டலம் அல்லது தொண்டை நாடு என அழைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியை 24 மாவட்டங்களாக பிரித்த பழங்குடியினர் பல கோட்டைகளை நிறுவினர். சென்னையின், மையிலாப்பூர், எழும்பூர், பல்லாவரம், வேளச்சேரி, நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகள் தொண்டை மண்டலத்தின் முக்கிய பகுதிகளாக விளங்கியதாக கூறுகிறார் வரலாற்றாளரான பேராசிரியர் கே.வி.ராமன்.
”நுங்கம்பாக்கம், அயனாவரம், வியாசர்பாடி போன்ற பெயர்கள் தற்போதுள்ள சென்னையை சேர்ந்த பெயர்களாக தோன்றினாலும், இவற்றை பற்றிய குறிப்புகள் 12 , 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் உள்ளன. மேலும், அவை அந்த பெயர்களின் பழமையை விளக்குகின்றன” என்கிறார் பேராசிரியர். திருவல்லிக்கேணி, திருவான்மியூர், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பல கல்வெட்டுகள், பல்லவ, சோழ, பாண்டிய சேரர் மற்றும் விஜயநகர அரசை சேர்ந்தவை. இந்த கல்வெட்டுகள், அந்தந்த ஆட்சி காலத்தில் ஏற்பட்ட அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றத்தை எடுத்துரைக்கின்றன.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அன்றைய புழல் கோட்டம் மற்றும் புலியூர் கோட்டத்தில் சேர்க்கப்பட்டது என்பதை 10 மற்றும் 12ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் விளக்குகின்றன. “இந்தப் பகுதிகள் தென்னிந்தியாவின் பழங்கற்கால வரலாற்றுகளைக் கொண்டுள்ளவை. முதல் பழங்கால பகுதிகள் பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பல இடங்கள் கண்டறியப்பட்டன. அங்கு இருந்த பல உபகரணங்களும் கற்காலத்தை சேர்ந்தவை” என்கிறார் ராமன்.
இங்கிருந்துள்ள கட்டடக்கலை, ஒவ்வொரு பகுதியிலும் அரசின் செயல்பாடுகளை விளக்குகின்றன. மக்களின் தேவைகளை, குறைகளை பூர்த்தி செய்யும் அரசின் குறுநில சபாக்கள் ஆதம்பாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் இருந்ததும், அவை 9ஆம் நூற்றாண்டில், பல்லவக் காலத்தில் நல்ல முறையில் வேலை செய்ததும் தெரிகிறது. பின்பு சோழ மற்றும் விஜயநகர ஆட்சியில் இந்த சபாக்கள் நகரின் பல இடங்களிலும் அரசு அலுவலகங்களாக இயங்கியுள்ளன. பெரிய புராணத்தின் ஆசிரியர் சேக்கிழார், குன்றத்தூரை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆன்மிகத்தில், வைணவத்தில் கோலோச்சிய பலரும் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். ஆழ்வார்களின் மூத்தவராகக் கருதப்படும் பேயாழ்வார், மயிலாப்பூரைச் சேர்ந்தவர் என்பதும், ராமானுஜரின் நெருங்கிய நண்பரான திருக்கச்சி நம்பி, பூந்தமல்லியைச் சேர்ந்தவராகவும் இருந்துள்ளனர்.
பௌதம் மற்றும் ஜைன மதங்கள் ஒரு காலத்தில் இங்கு தழைத்தோங்கியதற்கான பல கட்டட, அகழ்வாராய்ச்சி சான்றுகள் உள்ளன. சென்னையின் பல நினைவுச்சின்னங்கள் பல்லவர், சோழர் மற்றும் விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டவையே. சென்னை மாமல்லபுரம், மாமண்டூர் மற்றும் சிங்கப்பெருமாள்கோயில் உள்ளிட்ட குகைக்கோயில்கள் பல்லவர்களால் கட்டப்பட்டவையே.
கிருஷ்ணஸ்வாமி ஐயங்காரின், சென்னை நூற்றாண்டு நினைவு புத்தகம் 1939இல், மயிலாப்பூர் கிறிஸ்தவ காலத்துக்கே முன்பே இருந்ததாகவும் 2,000 ஆண்டுகள் பழமையான பகுதி என்பதும் அறியப்பட்டுள்ளது.

“தொண்டை மண்டலம், பல்லவர்களின் கருவாக இருந்துள்ளது. சோழர்களின் ஆட்சியில் அவர்களைக் காக்கும் பகுதியாக இருந்துள்ளது. விஜயநகர அரசின் வீழ்ச்சியைச் சுமந்து, பாண்டியர்கள் மற்றும் சளுவ நரசிம்மனின் ஆட்சியைப் பெற்று மும்முனை போட்டியும் கண்ட பகுதியாக விளங்கியது தொண்டை மண்டலம்” என்கிறார் வரலாற்றாளர் சத்தியநாதய்யர்.
நன்றி – இந்தியன் எக்ஸ்பிரஸ்,”
