சென்னைப் பல்கலைக்கழகத்தில் முறைகேடு! செனட் உறுப்பினர்!

Published On:

| By Balaji

சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிதியில் அதிகமான அளவில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து புகார் எழுப்பியுள்ள செனட் உறுப்பினர் சுந்தரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘முன் அனுமதி எதுவும் பெறாமல், பல்கலைக்கழகத்தின் நிதி செலவுகளுக்குத் திருப்பிவிடப்படுகிறது. இதுதொடர்பாக, சென்னைப் பல்கலைக்கழக செனட் கமிட்டியில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த 6 ஆண்டுகளில் பெருமளவில் பண மோசடி நடந்திருக்கிறது. இதில், நானோ தொழில்நுட்பத்துறையின் ரூ.16 கோடிகளும் அடக்கம். இதுபோன்ற, மேலும் சில மோசடிகள் நடந்துள்ளன. இதுகுறித்து விரிவான விசாரணையை மேற்கொள்ளவேண்டும்’’ என்று கூறினார்.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share