இன்று மாற்றப்படப் போகும் அதிமுக வேட்பாளர்கள் யார்?

Published On:

| By Balaji

227 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தான் அறிவித்த வேட்பாளர்களை மாற்றிக் கொண்டு வருகிறார். இதனால் அதிமுகவில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவருமே பதட்டத்தில் உள்ளார்கள்.இந்நிலையில் முக்கியமான நான்கு மாவட்டச் செயலாளர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்றும் அது குறித்து கவனிக்க வேண்டும் என்றும் தலைமைக்கு குறிப்புகள் போக அவர்களைப் பற்றிய விபரங்களை அதிமுக தலைமை ஆராய்ந்திருக்கிறது.

அதில் முக்கியமாக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் தருமர் அவரது சொந்த தொகுதியான முதுகுளத்தூர் தொகுதியை தனக்கு ஒதுக்குமாறு கேட்டிருந்தார்.ஆனால் பரமக்குடி நகராட்சி தலைவியாக இருக்கும் கீர்த்திகா முனுசாமிக்கு முதுகுளத்தூர் தொகுதியை மாற்றி அறிவித்து விட்டார் ஜெ. இப்போது தருமருக்கே அந்தத் தொகுதியை கொடுக்க ஆலோசனை நடந்து வருகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share