அஜித்துக்கு அண்ணாமலை வாழ்த்து!

Published On:

| By Kavi

பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் அஜித் குமாருக்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து கூறியுள்ளார்.

நடிகரும் கார் ரேசருமான அஜித்குமார் இன்று தனது 55ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும், அரசியல் பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

ADVERTISEMENT

அந்தவகையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “எளிய பின்னணியில் இருந்து தொடங்கி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைத்துறை மட்டுமின்றி, விருப்பமான அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி, நேர்மை, பணிவு ஆகியவற்றின் மூலம் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் அஜித்குமார் , மேலும் பல சாதனைகள் புரியவும், நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று வாழ்த்து கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share