தவெக தலைவர் விஜய்யின் அடுத்த கட்ட ஆன்மீக பயணம்

By Pandeeswari Gurusamy

|

Published on 1 May 2026, 2:21 PM

Vijay Chennai Attack

நடிகரும் தவெக தலைவருமான விஜய், நாளை (மே 2ஆம் தேதி) வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயம் மற்றும் நாகூர் தர்கா ஆகிய வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நடிகர் விஜய் புதிதாகத் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சி முதன்முறையாக களம் கண்டது. விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அக்கட்சி 233 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தனித்து களம் கண்டது. எடப்பாடி தொகுதியில் தவெக அறிவித்த வேட்பாளர் தலைமறைவான நிலையில், சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

வரும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை ஆளும் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று முடிவுகளை வெளியிட்டுள்ளன. இதனிடையே, தவெக தலைவர் விஜய் கடந்த 28ஆம் தேதி திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அங்கு கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை மற்றும் வேலும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து ஏப்ரல் 29ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். வரும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், விஜய் நாளை காலை நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பிரார்த்தனை மேற்கொ ள்ள உள்ளார்.

அதைத் தொடர்ந்து, மத நல்லிணக்கத்திற்கு சான்றாக விளங்கும் வகையில் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு சென்று வழிபட உள்ளார்.

ADVERTISEMENT

முன்னதாக திருச்சி கிழக்கு தொகுதி பிரச்சாரத்தின்போது விஜய் மும்மத பிரார்த்தனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel