இந்தியா திரும்புவது சரியாக இருக்காது: மல்லையா

Published On:

| By Balaji

மல்லையா லண்டன் சென்று விட்டாலும் அவருக்கு எதிரான பிடி இறுகி வருகிறது.செபி என அழைக்கப்படும், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில், வாங்கிய கடனை திருப்பிச்செலுத்த வசதி இருந்தும், செலுத்தாதவர்கள் பட்டியலில் இடம்பெற்றவர்கள் பங்குச் சந்தையில் இடம்பெறவும், கடன் சந்தையில் இடம்பெறவும் செபி அனுமதி மறுத்துள்ளது. மேலும், அவர்கள் இயக்குநர் குழுவில் இடம்பெறவும் தடை விதித்துள்ளது. விரைவில், இந்த விதி அரசாணையாக வெளியிடப்பட இருக்கிறது. செபியின் இந்த முடிவால் சமீபத்தில் சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் மல்லையாவுக்கு மேலும் நெருக்கடி அதிகரிக்கும். அவர் யுனைடட் ஸ்பிரிட்ஸ் தவிர்த்து, இதர நிறுவனங்களுக்கும் இயக்குநராக இருக்கிறார். இந்த அரசாணை வெளியானால் அப்பதவிகளில் இருந்து மல்லையா விலகநேரிடும். இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மீண்டும் பதிலளித்துள்ள மல்லையா இங்கிலாந்து ஊடகங்களால் நான் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். எந்த இடம் என்று பார்க்காமல், அவர்கள் நடந்துகொள்ளும்விதம் வேதனை அளிக்கிறது. நான் ஊடகங்களிடம் பேச மாட்டேன். எனவே, உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்” என்று டிவிட் செய்துள்ளார். இங்கிலாந்து ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கையில், “பொய்க் குற்றச்சாட்டுக்கு நான் ஆளாகியிருக்கிறேன். அதனால், தலைமறைவாக இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இந்திய ஊடகங்கள் என்னை வில்லனாக சித்தரிக்கின்றன. இந்தச் சூழலில் இந்தியா திரும்பவது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார். “கடந்த வருடமும் எனக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அப்போது நான் ஓடிவிடவில்லை. ஆனால், இப்போது ஏன் இது பெரிதாக்கப்படுகிறது?” என்றும் மல்லையா பேசியுள்ளார். இந்நிலையில், ஜி.எம்.ஆர். என்ற நிறுவனத்துக்கு மல்லையா கொடுத்த காசோலை ‘பவுன்ஸ்’ ஆகி இருக்கிறது. இதனால், செக் மோசடி வழக்கில் ஐதராபாத் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. ஏப்ரல் 13க்குள்ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.,”

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share