உலக புற்றுநோய் பருவ இதழில் வெளியான புள்ளிவிவரம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. டொரொண்டோ பல்கலைக்கழகம், மும்பை டாடா நினைவு மையம் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து சர்வதேச அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ‘இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 1 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் தினமும் 50 பேர் உயிரிழக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது. ‘ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 37 மில்லியன் குழந்தைகள் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழக்கிறார்கள்’ என்றும் தெரிவித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தீவிர மருத்துவச் சிகிச்சைகளின் மூலம் 80 சதவிகிதம் வரை குணப்படுத்தப்படுகிறார்கள். இதற்குப் பிறகாவது இந்திய அரசு விழித்துக்கொண்டு விரைவாக குழந்தைகள் புற்றுநோய் உயிரிழப்பைத் தடுக்குமா?
இந்தியா- தினமும் 50 குழந்தைகள் புற்றுநோய்க்கு பலி!
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
