முதல்வரை சந்தித்த பிரக்ஞானந்தா

Published On:

| By Jegadeesh

அர்ஜூனா விருது பெற்ற இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (டிசம்பர் 6 )சந்தித்து வாழ்த்து பெற்றார்.

செஸ் விளையாட்டில் இந்தியாவுக்கு பெருமை சோ்த்து வரும் இளம் வீரரும், தமிழகத்தைச் சோ்ந்தவருமான பிரக்ஞானந்தா, அா்ஜுனா விருது பெற்றுள்ளார்.

நடப்பாண்டில் தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 2 வெண்கலம் (ஓபன், தனிநபா்) வென்று அசத்தியிருந்தாா். நடப்பு உலக சாம்பியனான நாா்வே வீரா் மேக்னஸ் காா்ல்செனை ஒரே ஆண்டில் 3 முறை வீழ்த்திய ஒரே வீரராக இருக்கிறாா் பிரக்ஞானந்தா.

இந்நிலையில் குடியரசுத் தலைவரிடம் அர்ஜூனா விருது பெற்றுள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, இன்று (டிசம்பர் 6 ) சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா ‘தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சிறப்பாக இருந்ததாக வீரர்கள் பலரும் கூறினார்கள். பெருமையாக இருக்கிறது. அதனை ஏற்பாடு செய்து நடத்திய தமிழக அரசுக்கு நன்றி. உலகத்தின் நம்பர் 1 செஸ் வீரராக வர வேண்டும் என்பதே என் கனவு’ என்று கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சமந்தாவின் ‘யசோதா’: ஓடிடி ரிலீஸ் எப்போது?

குளிர்கால கூட்டத்தொடர்: திமுகவின் கோரிக்கைகள் என்னென்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share