தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன் ஆகியோர் உட்பட 25 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறையில் வீரர், வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அர்ஜூனா விருது, துரோணாச்சார்யா விருது, மேஜர் தியான்சந்த் விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டு வருகிறது.
இந்த விருதுகளை விளையாட்டு வீரர்கள் தங்களுக்குக் கிடைத்த கவுரமாகக் கருதுவார்கள்.
இந்த ஆண்டு அர்ஜுனா விருது பெறுவதற்குத் தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு அர்ஜுனா விருது வழங்க வேண்டும் என்று அகில இந்திய செஸ் கூட்டமைப்பு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவான் ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட உள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கான விருதுகளைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வரும் நவம்பர் 30 ஆம் தேதி வழங்க உள்ளார்.
மேஜர் தியான்சந்த் விருது தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மோனிஷா
”எங்க அப்பத்தா” நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு குரல்!
ஆளுநர் பேசுவதை அவரது வீட்டிலேயே கேட்க மாட்டார்கள்: டிடிவி தினகரன்