ஹெல்த் டிப்ஸ்: நாய்க்கடி.. உடனடியாக செய்ய வேண்டியது இதைத்தான்!

Published On:

| By christopher

நாய்க்கடிகள் பற்றிய செய்திகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் நாய் கடித்தால்  நீங்கள் உடனடியாக  செய்ய வேண்டியது இதைத்தான்.

நாய் கடித்துவிட்டால், ஓடும் பைப் தண்ணீரில் கடிபட்ட இடத்தை உடனடியாகக் காட்டி, சோப் பயன்படுத்தி 15 – 20 நிமிடங்கள் வரை நன்கு கழுவ வேண்டும். நாயின் நகம் கீறினாலும் இதைச் செய்ய வேண்டும்.

அதன்பின், உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும். மாறாக, கடித்த இடத்தில் மஞ்சள் தூள் வைப்பது, கட்டுப் போடுவது என்று செய்யக் கூடாது. அப்படிச் செய்தால், அங்கு தொற்று அதிகமாகும். எனவே, நாய்க்கடி திறந்த புண்ணாகவே சரி செய்யப்படும்.

நாய்க்கடியைப் பொறுத்தவரை வீட்டில் வளர்க்கும் நாய், தெரு நாய் என்று எந்த வேறுபாடும் இல்லை. தடுப்பூசி போடப்பட்ட நாயின் வாயிலும் ரேபிஸ் வைரஸ் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அதனால், எந்த நாய் கடித்தாலும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.

நாய் கடித்த முதல் நாள், TT ஊசியுடன் நாய்க்கடி தடுப்பூசி போடப்படும். அதன்பின், மூன்றாவது நாளிலும், ஏழாவது நாளிலும், பின்பு 28-வது நாளிலும் தடுப்பூசிகள் போடப்படும். இந்த அட்டவணையைப் பின்பற்றி ஊசி போட்டுக்கொள்வது முக்கியம். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாய்க்கடிக்கான தடுப்பூசி இலவசமாகப் போடப்படுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் முதல் சூப்பர் 8 சுற்று தொடக்கம் வரை!

கிச்சன் கீர்த்தனா : கேரட் சப்ஜா ஜூஸ்

ஒரே மாசம் வெயிலுக்கும் லீவு… மழைக்கும் லீவு… : அப்டேட் குமாரு

பெசன்ட் நகர் – விபத்தில் இளைஞர் பலி : எம்.பி. மகளுக்கு ஜாமின்!

டிஜிட்டல் திண்ணை: நிதிஷை ஆஃப் பண்ணிய அமித் ஷா… நாயுடுவிடம் தொடரும் பேரம்! -சபாநாயகர் தேர்வுக்குப் பின்னணியில் ஷாக் ஆபரேஷன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share