திமுக, பாமக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, பாமக வேட்பாளர்கள் இன்று (ஜூன் 19) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
ராகுல்காந்தி பிறந்தநாள்!
காங்கிரஸ் மூத்த தலைவரும், ரேபரேலி தொகுதி எம்.பியுமான ராகுல்காந்தி இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஜமாபந்தி தொடக்கம்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களிலும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் 1433-ம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி (வருவாய்த் தீர்வாயம்) இன்று முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி செல்லும் எடப்பாடி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று திருச்சி செல்கிறார்.
உலக சாண்டரிங் தினம்!
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 அன்று, உலக சாண்டரிங் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் வாழ்க்கையை ருசிக்கவும், மெதுவாக வாழவும் ஐநா வலியுறுத்துகிறது.
தொட்டபெட்டா செல்ல 3 நாட்களுக்கு தடை!
உதகை மாவட்டம் அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனையானது கட்டுமானப் பணிகள் காரணமாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக அம்மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது.
கம்பீர் 2ஆவது சுற்று நேர்காணல்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான பதவிக்கு விண்ணப்பித்திருந்த கவுதம் கம்பீருக்கு நேற்று முதல் சுற்று நேர்காணல் முடிந்த நிலையில், இன்று 2வது சுற்று நேர்காணல் நடைபெறுகிறது.
சூப்பர்-8 சுற்று முதல் போட்டி!
ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் பரபரப்பான சூப்பர்-8 சுற்று இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள தென் ஆப்ரிக்கா – அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 94வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் விலை லிட்டருக்கு 92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மிதமான மழை பெய்யக்கூடும்!
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : கேரட் சப்ஜா ஜூஸ்
ஒரே மாசம் வெயிலுக்கும் லீவு… மழைக்கும் லீவு… : அப்டேட் குமாரு