அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கியுள்ள கேரட், உடல் எடையை வேகமாக குறைக்கவும் உதவும். அப்படிப்பட்ட கேரட்டில் கோடைக்காலத்தில் வயிறு சூடாகாமல் சீராக இருக்க உதவும் சப்ஜா விதைகளைச் சேர்த்து இந்த கேரட் சப்ஜா ஜூஸ் செய்து அசத்தலாம். இந்த ஜூஸ், நாள் முழுக்க புத்துணர்ச்சியைத் தரும்.
என்ன தேவை?
கேரட் – 2
சப்ஜா விதைகள் – 2 டீஸ்பூன்
தேன் – 2 டேபிள்ஸ்பூன் (அல்லது) நாட்டுச் சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் – ஒன்று
இஞ்சி – கால் இன்ச் துண்டு (தோல் சீவவும்)
மிளகுத்தூள் – ஒரு சிட்டிகைஎப்படிச் செய்வது?
கேரட்டை நறுக்கிக்கொள்ளவும். சப்ஜா விதைகள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊறவிடவும். 10 நிமிடங்களில் உப்பி இருக்கும். பிறகு, மிக்ஸியில் கேரட், தேன், ஏலக்காய், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீர்விட்டு மையாக அரைத்து அதனுடன் ஊறிய சப்ஜா விதைகளைச் சேர்த்துக் கலக்கவும். பின்பு அதில் மிளகுத்தூள் தூவிப் பரிமாறவும்.

+1
+1
+1
+1
+1
+1
+1