இன்றைய பலதரப்பட்டவர்களும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினை கால்சியம் குறைபாடு. அதை உணவுகளின் மூலம் ஈடுகட்டலாம் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
“பால், கீரை, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கால்சியம் குறைபாட்டை கவனிக்காமல்விட்டால், 60 ப்ளஸ்ஸில் ஆண்களுக்கு வரும் ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படும் எலும்பு அடர்த்திக் குறைபாடு, பெண்களுக்கு மெனோபாஸ் ஆன அடுத்த சில வருடங்களிலேயே வரலாம். நடக்கவே முடியாத நிலை ஏற்படலாம். சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் சங்கு மாத்திரை இந்தப் பிரச்சினைக்கு உதவும்.
நடுத்தர வயதுக்குப் பிறகு உடல் சோர்வு அதிகரிக்கும். இதைப் போக்க தேற்றான் கொட்டை லேகியம், நெல்லிக்காய் லேகியம் எடுத்துக்கொள்ளலாம். முறை தவறும் மாதவிடாய், உடல்வலி, ஹாட் ஃபிளாஷஸ் பிரச்சினை போன்றவற்றுக்கெல்லாம் எண்ணெய்க் குளியல் ஓரளவு உதவும்.
அடுத்து வாழைப்பூ பொரியல், வாழைப்பூ பச்சடி என அடிக்கடி வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அசோக மரப்பட்டை சூரணம் அல்லது லேகியம் என சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதையும் சித்த மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ளலாம்.
ரத்தச்சோகை பாதிப்புள்ளவர்கள் மாதுளை மணப்பாகு, நெல்லிக்காய் லேகியம், அன்ன பேதி சூரணம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்’’ என்று சித்த மருத்துவத்துறையினர் பரிந்துரைக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: உங்கள் வீட்டில் ‘ஹேப்பி குக்கிங்’ அமைய இதை ஃபாலோ பண்ணுங்க!
இன்னும் மாநாடே தொடங்கல, அதுக்குள்ள இப்படியா? – அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: கூட்டணித் தலைவர்களோடு 40 நிமிடங்கள்… ஸ்டாலின் வீட்டில் நடந்தது என்ன?
ஓடிபி ஸ்கேன்… இனி வங்கி குறுஞ்செய்தி வர தாமதாமாகும்: டிராய் எடுத்த நடவடிக்கை!
தவெக மாநாடு: குடிநீர், மெடிக்கல் கேம்ப், செல் டவர்… முழு விவரம் இதோ!
மதுரை மழை – போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை : ஸ்டாலின் பேட்டி!