குறுஞ்செய்தி மூலம் நடக்கும் மோசடிகளைத் தடுக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் புது விதிமுறைகளை நவம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளது.
டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது வகைகளில் மோசடி நடந்து வருகிறது. பொதுமக்களின் செல்போனுக்கு வரும் ஓடிபி-ஐ பெற்று, அவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது, லிங்கை அனுப்பி அதன் மூலம் தகவல்களை திருடி பணத்தை மோசடி செய்வது போன்ற ஏமாற்று செயல்கள் தொடர்ந்து, நடந்து கொண்டிருக்கின்றன.
இதனை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) புது விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. அதன்படி, எந்தவொரு நிறுவனம் மற்றும் அமைப்புகள் ஓடிபி அல்லது குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கு முன்னர் அதன் தலைப்பு மற்றும் தகவல்களை தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் பதிவு செய்ய வேண்டும்.
இத்தகைய குறுஞ்செய்திகளை ‛ஸ்கேன்’ செய்யவும், அதனை சரிபார்க்கவும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அதிகாரம் உண்டு. இந்த புதிய விதிமுறைகளுக்கு உட்படாத தகவல்கள் தடை செய்யப்படும். வங்கிகள் அனுப்பும் ஓடிபி -ஆக இருந்தாலும் விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும்.
இதனால், பயனாளர்களுக்கு ஓடிபி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வங்கிகள் இந்த விதிமுறைகளுக்கு உடன்படவில்லை என்றால், பணப்பரிவர்த்தனை குறித்த தகவல்களை பெறுவதில் பயனாளர்களுக்கு தாமதமாகலாம். இந்த விதிமுறைகளுக்கு உட்படாத SMS-கள் தடை செய்யப்படும்.
இதனால், தேவையற்ற டெலி மார்க்கெட்டிங்க கால்கள் , பண மோசடி போன்றவை நடப்பது குறையும். இதன் காரணமாக வங்கி ஓடிபி உள்ளிட்டவை வரவும் காலதாமதம் ஆகலாம். அதாவது, தொலை தொடர்பு நிறுவனங்கள் அனுப்பப்படும் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்.களை சரிபார்த்த பின்னரே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
எனினும், இது போன்ற அதிரடி நடவடிக்கைகள் மோசடிகளை குறைப்பதில் பெரும் பங்காற்றும் என டிராய் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
விஜய் மாநாடு… தொகுதிக்கு எத்தனை பேர்? மொத்த டார்கெட் எவ்வளவு?
இந்திய ராணுவம் தீவிரவாதக்குழு – சீதாவாக நடிக்க சாய் பல்லவிக்கு கிளம்பிய எதிர்ப்பு!