தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் ஆளுநரை இரண்டாவது நாளாக இன்று (மே 7) சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைக்க முடியாமல் திணறி வருகிறது.
இந்தநிலையில் நேற்று ஆளுநர் அர்லேகரை சந்தித்த தவெக தலைவர் விஜய், மீண்டும் இன்று இரண்டாவது நாளாக ஆளுநரைச் சந்தித்தார்.
அப்போது தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை அடங்கிய கடிதத்தை வழங்கினார்.

இன்று சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.
இந்நிலையில் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு இன்று (7.5.2026) சென்னை லோக் பவனில் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்தார்.
இந்தச் சந்திப்பின் போது, தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை ஆதரவு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை ஆளுநர் விளக்கினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
