மேற்கு வங்க ஆளுநர் ஃபோட்டோவிற்கு போஸ் கொடுப்பதற்காக இந்தியக் கால்பந்து மற்றும் பெங்களூரு எஃப்சி அணியின் கேப்டன் சுனில் சேத்ரியை தள்ளி விடும் வீடியோ வைரலாகி வருகிறது.
டுராண்ட் கோப்பை 2022 கால்பந்து போட்டி கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நேற்று (செப்டம்பர் 19) நடைபெற்றது.
இந்த போட்டியில் சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சியை வீழ்த்தி டுராண்ட் கோப்பை போட்டிகளில் முதல் முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தது.
போட்டியில் வெற்றி பெற்ற அணிக்குச் சிறப்பு விருந்தினர்கள் பரிசு மற்றும் கோப்பையை வழங்கினர்.
சிறப்பு விருந்தினர்களில் மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனும் ஒருவர். வெற்றி பெற்ற அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஆளுநர் கையால் கோப்பையை வாங்க மேடைக்குச் சென்றார்.
கோப்பையைக் கையில் பெற்ற சுனில் சேத்ரி ஃபோட்டோவிற்கு போஸ் கொடுப்பதற்காக நின்றார்.
அப்போது மேற்கு வங்க ஆளுநர், சுனில் சேத்ரியை ஓரமாகத் தள்ளி விட்டு ஃபோட்டோவிற்கு போஸ் கொடுத்தார்.
சுனில் சேத்ரி ஒரு ஓரமாக நின்று கோப்பையைப் பெற்றுக் கொண்டார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஆயிரக்கணக்கானோர் இந்த வீடியோவை பார்வையிட்டுப் பகிர்ந்து தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
பலரும் ஃபோட்டோவிற்கு போஸ் கொடுப்பதற்காக இந்தியக் கால்பந்து அணியின் கேப்டனை அவமதித்துள்ளார் என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சிலர் டுராண்ட் கோப்பை 2022 பட்டத்தை வென்ற மேற்கு வங்காள ஆளுநருக்கு வாழ்த்துக்கள் என்று கிண்டலடித்து வருகின்றனர்.
மேலும் சுனில் சேத்ரி கோப்பை பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பெங்களூரு கால்பந்து வீரர் சிவசக்தி நாராயணன் மேடையில் பரிசு வாங்கும் போது சிறப்பு விருந்தினரால் ஃபோட்டோவிற்கு போஸ் கொடுப்பதற்காகத் தள்ளி விடப்பட்டார்.
அதுதொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.
மோனிஷா
6 பந்துகளில் 6 சிக்சர்: வெற்றியை மகனுடன் கொண்டாடிய யுவராஜ் சிங்