ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட தொகுப்பூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!

Published On:

| By Kavi

Wage hike for Integrated School Education Scheme

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட தொகுப்பூதியதாரர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. Wage hike for Integrated School Education Scheme

பள்ளி கல்விதுறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் பணியாற்றும் முழுநேர தொகுப்பூதிய பணியாளர்கள், திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட தொகுப்பூதியதாரர்களுக்கு இன்று (ஜூலை 15) தமிழக அரசு ஊதிய உயர்வை அளித்துள்ளது.

அதில், “தொகுப்பூதியத்தில் பணியாற்றும் புரோகிராமர், சிவில் பொறியாளர், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளர், எஸ்எம்சி கணக்காளர், தரவு பதிவு அலுவலர், அலுவலக உதவியாளர், உதவியாளர் ஆகியோருக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும்.

ADVERTISEMENT

நடப்பாண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு அமல்படுத்தப்படும். அரசுப் பணியில் உள்ள ஓய்வு பெற்ற ஆலோசகர்கள், உதவியாளர்களுக்கு இது பொருந்தாது. ஊதிய உயர்வு பெற ஓராண்டு பணி அனுபவம் கட்டாயம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Wage hike for Integrated School Education Scheme

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share