நடிகர் விஜய் சேதுபதியின் 50 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஜூலை 12) வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘விடுதலை பாகம் 1’. இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதன்பின்னர் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் 50 வது படத்தை ‘குரங்கு பொம்மை’ இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஜூலை 12) வெளியாகியுள்ளது.
Written & directed by @Dir_Nithilan
@anuragkashyap72 @mamtamohan @Natty_Nataraj @Abhiramiact@AjaneeshB @Philoedit @DKP_DOP @infinit_maze @PassionStudios_ @TheRoute @Sudhans2017 @jagadishbliss @ThinkStudiosind @santhosh_music @jungleeMusicSTH… pic.twitter.com/mtyowdXTRi— VijaySethupathi (@VijaySethuOffl) July 12, 2023
அதன்படி அவரின் 50 வது படத்திற்கு ‘மகாராஜா’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ் , நட்டி என்ற நட்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கேட்ச்சை கோட்டைவிட்ட ஃபீல்டர்கள்: வைரல் வீடியோ!
