தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் மூன்று வீரர்கள் சேந்து கேட்ச் ட்ராப் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த மாதம் 12 ஆம் தேதி தொடங்கிய 7 வது தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இன்று நடைபெறும் இறுதி போட்டியில் கோவை மற்றும் நெல்லை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.
இதனிடையே, கடந்த ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அது தொடர்பான வீடியோ காட்சிகள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது, நேற்று முன் தினம் நடைபெற்ற தகுதிச் சுற்று இரண்டில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் வீரர் சுபேத் பாடி ஒரு பெரிய ஷாட் ஒன்றை அடித்தார்.
ஆனால் அது பேட்டின் விளிம்பில் பட்டு கீப்பர் பக்கம் சென்றது. அப்போது அந்த பந்தை பிடிக்க நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் வீரர்கள் மூன்று பேர் முயன்றனர். அவர் பந்தை பிடித்து விடுவார் என்று ஒருவரும் இவர் பந்தை பிடித்து விடுவார் என்று மற்றொரு வீரரும் நிற்க கடைசியில் யாரும் பந்தை பிடிக்க வில்லை. மாறாக பந்து தரையில் விழுந்தது..கேட்சில் இருந்து தப்பித்தார் திண்டுக்கல் வீரர் சுபேத் பாடி.
Where have we seen this before? 😂
..#TNPLonFanCode pic.twitter.com/0i884TqTxB
— FanCode (@FanCode) July 11, 2023
தற்போது மூன்று வீரர்கள் சேர்ந்து கேட்ச் ட்ராப் செய்த இந்த வீடியோ காட்சிகள் தான் சமூகவலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நெட்டிசன்கள் பலரும் அந்த வீடியோவிற்கு நகைச்சுவையான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பாஜக: மூன்று மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள்!
’தமிழகத்தில் பெட்ரோல் குண்டு கலாச்சாரம் தலைத்தூக்கியுள்ளது’- ஜெயக்குமார்