தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சியில் ரோடு ஷோவில் ஈடுபட்டுள்ளார்.
நடிகர் விஜய் முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறார். வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இதற்காக கடந்த மார்ச் 30ஆம் தேதி பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.
இந்நிலையில் திருச்சி தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு பிரச்சார வாகனத்தில் புறப்பட்டுள்ள விஜய், ரோடு ஷோவில் ஈடுபட்டுள்ளார்.
அவரது வாகனத்துக்கு பின்னால் பல இளைஞர்களும், சிறுவர்களும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் திருச்சி கிழக்கில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் விஜய் பின்னர் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
மதியம் 12.30 மணி முதல் மாலை 4 மணி வரை, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது என தவெக தலைமை கூறியுள்ளது.
நேற்று திருச்சியில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
