மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் வீரமணி வழக்கு விவகாரம் தொடர்பாகவும் முதல்வர் விஜய் பேசியுள்ளார்.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டும், உரிய ஆதாரம் இல்லை என குளோசர் ரிப்போர்ட் தாக்கல் செய்தது ஏன் என்ற கேள்விதான் தமிழகத்தின் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.
இந்த நிலையில் முதல்வர் விஜய் வீரமணி விவகாரம் தொடர்பாக மதுராந்தகம் பிரச்சாரத்தில் பேசுகையில், ‘ஒரு கொடுமையான விஷயம் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றி பேச வேண்டாம் என்று நினைத்தேன்.
நம் தமிழ்நாட்டு இளம் பெண்களை, பச்சைப் பிள்ளைகளை ஒருத்தன் இத்தனை வருடமாக சீரழித்துக் கொண்டிருந்திருக்கிறான்..
அந்த வழக்கு கடந்த திமுக ஆட்சியில் வந்ததும், அந்த சாப்டரையே, அந்த ஹிஸ்டரியையே எல்லாம் மூடி மறைத்திருக்கிறார்கள்.
உள்ளுக்குள்ளே என்ன டீலிங் நடந்தது என்று தமிழ்நாடு கேள்வி கேட்கிறது. வாயை திறங்கள் ஸ்டாலின் சார்.
உங்களோடு சேர்ந்து அந்த மற்றும் பலரும் வாய் திறக்காமல் இருக்கிறார்கள். இதில் கூடவா கூட்டு வைத்திருப்பீர்கள்.
என்னமோ பெண்கள் பாதுகாப்புக்கு என்றே பிறந்த மாதிரி இந்த திமுகவும் மற்றும் பலரும், பெண்களை சீரழிச்சவனை, இத்தனை வருடமாக மூடி மறைத்த விஷயத்தை விஜய் வந்த உடனேயே தோண்டி எடுத்து… உள்ளே தூக்கி வைத்து விட்டானே என்ற அதிர்ச்சியில் வாய் திறக்காமல் இருக்கிறார்களோ என்னமோ…
எல்லாம் பச்சைப் பிள்ளைகள்… அவர்களுடைய வலியை பற்றி வெளியில் பேச முடியவில்லை என்றால் அப்புறம் இத்தனை ஆண்டுகளாக என்ன அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள்” என்ற கேள்வி எழுப்பினார்.
