தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து தமிழக முதல்வர் விஜய் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், “என் நெஞ்சில் குடியிருக்கும் மதுராந்தகம் தொகுதி மக்கள்… உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம்! என்னுடைய சொந்தங்களே.. உங்கள் எல்லாரையும் சந்தித்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம். நான் இன்னைக்கு முதலமைச்சராக எல்லாம் வரவில்லை. இடைத்தேர்தலுக்காக ஓட்டு கேட்க வந்திருக்கிறோம். முதலமைச்சரா எல்லாம் நான் இங்க வரவில்லை.. எப்பவும் போல உங்க வீட்டு பிள்ளையா, உங்க வீட்டு மகனா, உங்க வீட்டு அண்ணனா, உங்க வீட்டு தம்பியா நான் வந்திருக்கிறேன்.
உங்ககிட்ட ஒரே ஒரு கேள்விதான் கேட்கணும். ஏன் உங்க விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? உங்க த.வெ.க. ஆட்சிக்கு வரக்கூடாதா? ஒரு தனி கட்சியா, சாமானியர்களோட ஒரு கட்சியா, பெண்கள் பேராதரவோட, இளைஞர்கள் பேராதரவோட, குடும்பங்கள் பேராதரவோட, பெண்களோட சேஃப்டிக்காக, போதைப்பொருளை ஒழிக்க, ரொம்ப முக்கியமா, லஞ்சத்தை ஒழிக்க, ஊழலை ஒழிக்க, ஏன் உங்க விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா?அப்புறம் ஏன் தினம் இந்த திமுக… சாரி, தீயசக்தி… கொஞ்சம் டச் விட்டுப்போச்சு. ஓம் சக்தி பராசக்தி!.. ஓம் சக்தி பராசக்தி!..
நம்ம ரூட் ஒரே ரூட் தான்
ஏன் இந்த தீயசக்தி நம்மள பார்த்து தினமும் தினமும் இந்த மாதிரி அவதூறா, அசிங்கமா, ஆபாசமா பேசிக்கிட்டு இருக்காங்க. ஒரே ஆபாச நதியாக நாட்டில் ஓடிக்கிட்டு இருக்கிறது. இதெல்லாம் ஏன் தான் இப்படி பேசுறாங்க என்று எனக்கு தெரியல. இதெல்லாம் நீங்க பார்த்துகிட்டு இருக்கீங்க.நான் சினிமாவில் ஜெயிச்சதுக்கும், இன்னைக்கு நான் அரசியலில் ஜெயிச்சதுக்கும் தமிழ்நாட்டு மக்களாகிய என்னுடைய உறவுகள் தான் காரணம். அந்த உறவுகள்னால தான் கட்சிய ஆரம்பிச்சு கிட்டத்தட்ட இரண்டு இரண்டறை வருடத்திற்குள் 35 சதவீதம் ஓட் ஷேர் வாங்கி நம்மால் ஜெயிக்க முடிஞ்சது. ஒரு தனிப்பெரும் கட்சியா நம்மால் ஜெயிக்க முடிஞ்சது. அன்னைக்கு ஜெயலலிதா மேடமை இதே ஸ்டாலின் சார் தான் அவதூறா பேசி அந்த வீடியோ இன்னும் வைரலா போய் கொண்டு இருக்கிறது. ‘அன்னலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’… இந்த மாதிரி தான்! அவர் மட்டும் இல்ல, அவர் குடும்பத்தை சேர்ந்தவங்களும் இப்படித்தான் பேசுறாங்க. அந்த கட்சியில் இருக்கிற பெரிய பெரிய பொறுப்புல இருக்கிறவங்களும் இப்படித்தான் பேசுகிறார்கள். இதையெல்லாம் மக்களாகிய நீங்கள் ரொம்ப உன்னிப்பாக கவனிக்கிறீர்கள் என்று எனக்கு நல்லாவே தெரியும்.
இப்படி திமுக ஒரு பக்கம் பேசிக்கிட்டு இருந்தால், இதுக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்றது யார் தெரியும்ல? ‘மற்றும் பலர்’. ‘மற்றும் பலர்’னா யார் தெரியும்ல? ஒரு மூணு நாலு மாசம் ஆயிருக்கும், டச் விட்டு போயிருக்கும். அதனால தான் ரீகேப் பண்றேன்—அதிமுக!அதாவது ஜெயலலிதா மேடத்தையே தப்பா பேசுனவங்களோட ஒன்னா சேர்ந்து ஆட்சி அமைக்கணும்னு ஐடியா பண்ணப்பவே, இந்த மற்றும் பலரோட அந்த திட்டமெல்லாம் என்னன்னு ஃபுல்லா தெரிஞ்சு போச்சு. அப்பவே அவங்க முகமூடியெல்லாம் கிழிய ஆரம்பித்து விட்டது. இதுல ஹைலைட் என்னன்னா, அவங்க முகமூடி கிழிஞ்சுடுச்சுன்னு தெரியாமலே கூவிக்கிட்டு இருக்காங்க.சரி, யார் என்ன கூவுனா நமக்கென்னங்க? நம்ம ரூட் ஒரே ரூட் தான், ஸ்ட்ரைட் ரூட் தான். அதனால மதுராந்தகம் தொகுதி மக்களே, இந்த இடைத்தேர்தல்ல நம்ம த.வெ.க. சார்பாக உங்க சகோதரி, நம்ம வீட்டு பெண்ணுக்கு, என் தங்கச்சி மரகதம் குமரவேல் அவர்களுக்கு தயவுசெஞ்சு விசில் சின்னத்துல ஓட்டு போடுங்க.
ஊழலின் ஊற்றுக்கண்
நீங்க விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுறது, இந்த பெண்களை அவதூறா, அசிங்கமா, ஆபாசமா பேசுற ஒவ்வொருத்தருக்கும் நீங்க கொடுக்குற மிகப்பெரிய ஒரு தண்டனையாக இருக்கும். இந்த திமுகவுக்கோ இல்ல இந்த தீயசக்திக்கோ இல்ல இந்த ஆபாச சக்திக்கும் மற்றும் பலருக்கும் நீங்க ஓட்டு போட்டீங்கன்னா, அது பெண்களை தப்பா பேசுறவங்களை நீங்க ஆதரிக்கிற மாதிரி ஆகிவிடும்.அதனால நம்ம வீட்டு பெண்களை இந்த மாதிரி பேசுனவங்களை நீங்க சும்மாவே விடக்கூடாது, அதுல உறுதியா இருக்கணும்.’மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்று அண்ணா சொன்னார். அப்படி பார்த்தா 108 சீட் வாங்குன நாம ஆட்சி அமைக்கணும். ஆனால் அது நடந்து விடக் கூடாதுன்னு சொல்லிட்டு இந்த திமுகவும் மற்றும் பலரும் சேர்ந்து ஒரு கூத்து பண்ணாங்க பாருங்க… இந்த மற்றும் பலர் வந்து பாஜகவோட ஒரு பிராஞ்ச். ஆனா இப்ப பாத்தீங்கன்னா திமுகவோட ஒரு கிளைக் கழகமாவே மாறிட்டாங்க. இத நான் சொல்லல, பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் சொல்றாங்க.
அவர்களை பொறுத்தவரைக்கும் ‘அனுபவம் அனுபவம்’னு சொல்லி மக்கள் காசை கொள்ளையடிச்சவங்க ஆட்சிக்கு வரலாமாம். ஆனா நம்மள மாதிரி சாதாரண குடும்பத்துல இருந்து ஒரு சாமானியர்களோட ஒரு கட்சி ஆட்சிக்கு வரக்கூடாதாம்.ஏன் தெரியுமா? உங்க விஜய்-யோட ஆட்சி வந்துட்டா, அதாவது பெரியார், அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் வழியில உங்க விஜய்யோட ஆட்சி வந்துட்டா ஊழலெல்லாம் செய்ய முடியாது. மக்கள் காசை தொட முடியாது. தொட்டா மாட்டிக்குவோம்னு தெரியும். அதனால இந்த ஆட்சி வரக்கூடாதுன்னு ரெண்டு பேரும் மாறி மாறி திட்டம் போட்டுட்டு இருந்திருக்காங்க.இதத்தானே IUML (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) சட்டசபையில் சொன்னாங்க. ரிசைன் பண்ணிட்டு போன அத்தனை எம்.எல்.ஏ.க்களும் இதத்தானே சொல்றாங்க. மக்கள் காசை தொட மாட்டோம், தொடவும் விட மாட்டோம்! (அப்போது சட்டசபையில் செய்த சைகையை விஜய் செய்து காட்டினார்.)
அதனால் சட்டசபையில் அந்த காலத்தில் இருந்து அவர்கள் செய்த ஊழலை எல்லாம் எடுத்து சொன்னோம். ஊழலின் ஊற்றுக்கண் யார் என்று இன்று இருக்கிற ஜெனரேஷனுக்கு தெரியப்படுத்தணும் இல்லையா? நம்மளோட கடமை இல்லையா? அதனாலதான் அந்த காலத்தில் இருக்கிற ஊழல் எல்லாம் எடுத்துச் சொன்னால், எதிர்கட்சி திமுக-வில் இருந்து சொல்றாங்க, “அப்ப எல்லாம் விஜய் பிறக்கவே இல்லை” அப்படின்னு. நான் எப்போ பிறந்தால் உங்களுக்கு என்னங்க?
வரலாறை எடுத்துப் படிச்சுப் பார்த்தா உங்களுடைய வண்டவாளம், தண்டவாளம் எல்லாம் தெரியப்போகுது. திமுக மூலமாக தான் அதுக்கு முன்னாடியே ஊழல் எல்லாம் பொறந்துடுச்சு, நான் எப்ப பிறந்தா உங்களுக்கு என்ன? அதாவது, அசெம்ப்ளியில ஒன்னு கவனிச்சீங்களா? ‘ஊழல்’ அப்படின்னு சொல்லிட்டா போதும், “ஆாதாரத்தைக் காட்டு” அப்படின்னுவாங்க. உடனே ஆதாரத்தைக் காட்டினால், “அதெல்லாம் கோர்ட்ல ப்ரூவ் ஆகணும்ல” அப்படின்னு சொல்லுவாங்க. உடனே அதுக்கு வேற ஏதாவது சொன்னா, “கோர்ட்ல பேசுறதைப் பத்தியெல்லாம் இங்க பேசக்கூடாது” அப்படின்னுவாங்க.
நான்தான் முதல்லயே பேச்சை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சொன்னேன்: “நான் இந்த கோர்ட், கேஸ், இந்த வழக்கு அதுக்குள்ளெல்லாம் நான் போகவே இல்லை, அதைப்பத்தியெல்லாம் நாங்க எந்த கமெண்ட்டும் சொல்லல” அப்படின்னு சொல்லிதான் பேச்சை ஆரம்பிச்சேன். ஆனால் அவங்க அதெல்லாம் காதுலையே போட்டுக்கறதில்லை. கத்து கத்து கத்துன்னு கத்திக்கிட்டே இருக்குறாங்க. ஏன் கத்துறாங்க, எதுக்கு கத்துறாங்கன்னு நமக்கும் புரியமாட்டேங்குது.
நமக்கு வேற இந்த அசெம்ப்ளிக்கு ஃபர்ஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ் வேற. அவங்க கத்துறதுக்கு முன்னாடி, அதை மீறி நம்ம பேசுறதா வேண்டாம்மான்ற ஒரு கன்ஃபியூஸ்ட் ஸ்டேட்லயே நானும் நின்னுட்டு இருக்குறேன். ஆனா அவங்களோட இன்டென்ஷன் மட்டும் எனக்கு தெளிவா புரிஞ்சிருச்சு. ‘விஜய்யை பேச விடக்கூடாது’. பேசு பேசு பேசுன்னு சொல்லுவாங்களாம், ஆனா பேச ஆரம்பிச்சா பேசவிடக்கூடாது. இதுதான் அவங்களோட இன்டென்ஷன். அதனாலதான் அவங்க சத்தத்தை மீறி, நான் என் குரலை உயர்த்தி, அதாவது என் குரல்தான் மக்களை போய் ரீச் ஆகணுமா. அதனால நான் இங்க காட்டுக் கத்து கத்த வேண்டியதா இருக்கு. வேற வழி இல்லை.
அதாவது அவங்களுக்கு, “என்னடா இந்த விஜய் 50 வருஷத்துக்கு முன்னாடி இருக்கிற ஊழல் எல்லாம் எடுத்துச் சொல்றானே, இது இன்னைக்கு 50 வயசுக்குள்ள இருக்கிறவங்களுக்கெல்லாம் இதப் பத்தி தெரியாதே! இன்னைக்கு இருக்கிற ஜெனரேஷனுக்கெல்லாம் இதப் பத்தி தெரியாதே! நம்ம இதை வச்சுதான மிஸ்டர் கிளீன், மிஸ்டர் கிளீன்னு இமேஜை வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கிறோம். இவன் என்னடான்னா பழைய கதையெல்லாம் எடுத்து விட்டுட்டு இருக்கானே” அப்படின்னு சொல்லி நம்மளப் பத்தி அசிங்கமா, அவதூறா பேசுறது.
இந்த ‘திக் ஸ்கின்’ (Thick Skin), ‘திக் ஸ்கின்’னு சொல்லுவாங்க, கேள்விப்பட்டிருக்கீங்களா? அது உலகத்திலேயே ஒரே எக்ஸாம்பிள் நாம மட்டும்தான். 30, 34 வருஷமா எல்லாம் பார்த்துட்டு தான் இதுக்குள்ள வந்திருக்கிறேன். அதனால நமக்கெல்லாம் இது ஒன்னும் புதுசு இல்லை. எனக்கு எப்படி தோணுதுன்னா, “எனக்கு இன்னும் பத்தல, நிறைய எதிர்பார்க்கிறேன்”ன்ற மாதிரிதான் எனக்கு தோணுது. அதனால ஸ்டாலின் சாருக்கும் சொல்லிக்கிறோம், இந்த திமுக-வுக்கும் சொல்லிக்கிறோம். ஊழல் செஞ்ச கூட்டத்தை விடவே மாட்டோம்! இனிமே நீங்க தமிழ்நாட்டு மக்களை ஏமாத்தவும் முடியாது, ஏமாற்ற விடப்போவதும் இல்லை.
ஸ்டாலின் சார் என் ஸ்வீட் அங்கிள்.
இந்த ED-லயும், சர்க்காரியா கமிஷன்லயும் ஒன்னு சொன்னாங்களே, “Abusing their official position” அப்படின்னு, அதை நாங்க ஒரு நாளும் செய்யமாட்டோம். நான் ஏற்கனவே கேட்டதைத்தான் இங்க திரும்பவும் கேட்கிறேன். “இதுக்கு முன்னாடி நாங்க மக்கள் காசை தொட்டதே இல்லைன்னு உங்களால சொல்ல முடியுமா? இனிமே நாங்க மக்கள் காசை தொடவே மாட்டோம்னு உங்களால சொல்ல முடியுமா? இதுவரைக்கும் நாங்க ஊழலே செஞ்சதில்லைன்னு உங்களால சொல்ல முடியுமா? அட்லீஸ்ட், இனிமே நாங்க ஊழலே செய்ய மாட்டோம்னு தான் உங்களால சொல்ல முடியுமா?”
அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி உங்களுடைய சொத்துக் கணக்கு எவ்வளவு, அரசியலுக்கு வந்ததுக்கப்புறம் உங்களுடைய சொத்துக் கணக்கு எவ்வளவுன்னு காட்ட முடியுமா?
“நீ என்னப்பா எப்பப் பாரு ஸ்டாலின் சாரைப் பத்தியே கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கிற, அவரே பாவம் இந்த எலக்சன்ல இந்த மாதிரி ஆயிப்போச்சு, எதிர்கட்சித் தலைவராக்கூட இல்லை” அப்படின்னு சில விமர்சனம் எல்லாம். அவர் தோத்தாலும் ஜெயிச்சாலும் அவர் என் அங்கிள். அவர் என் ஸ்வீட் அங்கிள்.
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டியே. ஒன்னு, தூய சக்தி த.வெ.க! இன்னொன்னு, தீய சக்தி தி.மு.க! இவ்வளவு நாளா இதை நான் மட்டும்தான் கூவு கூவுன்னு கூவிக்கிட்டு இருந்தேன். இன்னைக்கு பார்த்தீங்கன்னா எதிர்கட்சி திமுக-வில் இருந்தே சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க, கவனிச்சீங்களா? “எங்களுக்கும் த.வெ.க-வுக்கும் தான் போட்டி” அப்படின்னு. அதான் வாழ்க்கை! வாழ்க்கை ஒரு வட்டம்டா!
தமிழ்நாட்டு மக்களுடைய குழந்தை
எந்த மேடைக்கு போனாலும், மேடைக்கு மேடை “விஜய் அரசியலுக்கு வந்து ரெண்டு வருஷம் தான் ஆச்சு, ரெண்டு வருஷம் தான் ஆச்சு, அல்லுது, பொலம்பி தள்ளிக்கிட்டு…” ஆமா, நாங்க அரசியலுக்கு குழந்தைதான். தமிழ்நாட்டு மக்களுடைய குழந்தை! ஆனா இங்க சில பேரு பவள விழா கட்சியோட பண்ணையார் வீட்டுக் குழந்தையா இஷ்டத்துக்கு வளந்துகிட்டு… அதனாலதான் சொல்றோம், திமுக-வும் திமுக-வோட தலைமையும்தான் நமக்கு போட்டியே. நம்மளோட கேள்வி எப்பவுமே ஸ்டாலின் சாருக்கு மட்டும்தான்.
“நான் வந்து ஒரு முதலமைச்சரா பல இடத்துக்கு இன்ஸ்பெக்ஷனுக்கு போறேன். அதுல ஒரு நாள் ஒரு பாலத்துக்கு போறேன். உடனே நாங்க கட்டுன பாலத்து மேல ஏறி நின்னு விஜய் என்ன ஷூட்டிங் எடுக்குறாரு”… இல்லை எனக்கு ஒரு டவுட் சார். நீங்க கட்டுன பாலம்னா எப்படி சார், நீங்களே சொந்தமா காசு கொடுத்து கட்டுனீங்களா சார்? அப்படி கட்டுனீங்கனா, செக்கெல்லாம் எங்கிருந்து சார் போச்சு? கோபாலபுரத்துல இருந்து போச்சா, இல்லை சித்தரஞ்சன் சாலையில இருந்து போச்சா? பாவம் உங்ககிட்டயே 10,000 ரூபாய் தானே சார் இருக்கு? 10,000 ரூபாயை வச்சு எப்படி சார் பாலம்லாம் கட்டுனீங்க, சொந்தமா கார் கூட இல்லையே சார் உங்ககிட்ட? இதெல்லாம் நீங்க கொடுத்த டீடைல் சார். அந்த டீடைல்ஸ வச்சு பார்த்தா செலவுக்கு பணமே இல்லாத பரம ஏழையா இருக்கிற நீங்க எப்படி சார் பாலம்லாம் கட்டுனீங்க 10,000 ரூபாய வச்சுகிட்டு?
ஓ, அந்த கணக்கில வராத, அந்த… அந்த பணத்தை வச்சு அப்படி கட்டுனீங்களா சார்? இதெல்லாம் நாங்க கேட்கல சார், மக்கள் கேக்குறாங்க சார். அதாவது முதலமைச்சர்ன்றது மக்களுடைய சேர்வண்ட், வேலைக்காரன். முதலமைச்சர் என்றால் மக்களோட முதலாளி எல்லாம் கிடையாது. நீங்க… நீங்களும் உங்க குடும்பமும் பேசுறதைப் பார்த்தா என்னமோ தமிழ்நாட்டிற்கே நீங்களும் உங்க குடும்பமும்தான் முதலாளி மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க.
எலக்சனுக்கு முன்னாடி ஒரு கணக்கு ஒன்னு போட்டீங்க, இந்த அரித்மெடிக்ஸ், மேத்தமேட்டிக்ஸ், ஒன்னும் வேலைக்கால. இப்போ இன்னொன்னு ஒரு கணக்கு ஒன்னு போட்டு இருக்கீங்க, எப்படா குறுக்கு வழியில போய் இந்த ஆட்சியை கலைச்சிரலாம்னு, அதுவும் எங்களுக்கு தெரியும் சார். உங்க கணக்கெல்லாம் ஒன்னத்துக்கும் உதவாத மனக்கணக்கு. எனக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையில் இருக்கும் அன்பு கணக்கு. அரசியல் எல்லாவற்றையும் தாண்டிய பாசக்கணக்கு இது திமுகவோடு சேர்ந்து ஆட்சி அமைக்க நினைத்த மற்றும் பலராலும் ஒன்னும் கிழிக்க முடியாது. ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் பச்சைக்குழந்தை முதல் வயசான தாத்தா பாட்டி வரை என் சொந்தங்கள் உறவுகள்” என்றார்.
