‘எங்களுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி’ என்று திமுகவினரே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
மதுராந்தகத்தில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு 5 முனை போட்டி நிலவுகிறது.
தவெக சார்பில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் களம் காண்கிறார்.
இவரை ஆதரித்து இன்று (செப்டம்பர் 25) முதல்வரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், பிரச்சாரம் மேற்கொண்டார்.
கொஞ்சம் டச் விட்டுப்போச்சு
அவர் பேசுகையில், ”என்னுடைய சொந்தங்களே, உங்க எல்லாரையும் சந்திச்சதுல ரொம்ப ரொம்ப சந்தோஷம். நான் இன்னைக்கு முதலமைச்சராலாம் வரல. இடைத்தேர்தலுக்காக ஓட்டு கேட்டு வந்திருக்கிறோம். எப்பவும் போல உங்க வீட்டு பிள்ளையா, உங்க வீட்டு மகனா, உங்க வீட்டு அண்ணனா, உங்க வீட்டு தம்பியா நான் வந்திருக்கிறேன்.
உங்ககிட்ட ஒரே ஒரு கேள்விதான் கேட்கணும். ஏன் உங்க விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? உங்க தவெக ஆட்சிக்கு வரக்கூடாதா? ஒரு தனி கட்சியா, சாமானியர்களோட ஒரு கட்சியா, பெண்கள் பேராதரவோட, இளைஞர்கள் பேராதரவோட, குடும்பங்கள் பேராதரவோட, பெண்களோட சேப்டிக்காக, போதை பொருளை ஒழிக்க, ரொம்ப முக்கியமா லஞ்சத்தை ஒழிக்க, ஊழலை ஒழிக்க… ஏன் உங்க விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா?
அப்புறம் தினம் இந்த திமுக… சாரி, தீய சக்தி… கொஞ்சம் டச் விட்டுப்போச்சு… ஓம் சக்தி பராசக்தி… அப்புறம் இந்த தீய சக்தி நம்மள பார்த்து தினம் தினம் இந்த மாதிரி அவதூறா, அசிங்கமா, ஆபாசமா பேசிக்கிட்டு ஒரே ஆபாச நதியா ஓடிட்டு இருக்கு நாட்டுல. இதெல்லாம் ஏன்தான் இப்படி பேசுறாங்கன்னு எனக்கு தெரியல. இதெல்லாம் நீங்க வாட்ச் பண்ணிட்டு இருக்கீங்க.
நான் சினிமாவில் ஜெயிச்சதுக்கும், இன்னைக்கு நான் அரசியல்ல ஜெயிச்சதுக்கும் தமிழ்நாட்டு மக்களாகிய என்னுடைய உறவுகள் தான் காரணம். அந்த உறவுகள்னாலதான் கட்சி ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ரெண்டு, ரெண்டரை வருஷத்துக்குள்ளேயே 35 சதவீதம் வோட் ஷேர் வாங்கி நம்மளால ஜெயிக்க முடிஞ்சது. ஒரு தனி பெரும் கட்சியா நம்மளால ஜெயிக்க முடிஞ்சது.
அன்னைக்கு ஜெயலலிதா மேடமை, இதே ஸ்டாலின் சார்தான் அவதூறா பேசி, அந்த வீடியோ இன்னும் வைரலா போயிட்டு இருக்கு. ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’… இந்த மாதிரிலாம் அவர் மட்டும் இல்லை, அவர் குடும்பத்தை சேர்ந்தவங்களும் இப்படித்தான் பேசுறாங்க. அந்த கட்சியில் இருக்கிற பெரிய பெரிய பொறுப்பில் இருக்கிறவங்களும் இப்படித்தான் பேசுறாங்க. இதை எல்லாம் மக்களாகிய நீங்க ரொம்ப உன்னிப்பா கவனிக்கிறீங்கன்றது எனக்கு நல்லாவே தெரியும்.
இப்படி திமுக ஒரு பக்கம் பேசிக்கிட்டு இருந்தா, இதுக்கு மறைமுகமா சப்போர்ட் பண்றது யார்? தெரியும்ல… மற்றும் பலர்… மற்றும் பலர்னா யாருன்னு தெரியும்ல? ஒரு மூணு நாலு மாசம் ஆயிருக்கும், டச் விட்டு போயிருக்கும், அதனாலதான் ரீகேப் பண்றேன்… அதிமுக.
அதாவது ஜெயலலிதா மேடமையே தப்பா பேசினவங்களோட ஒன்னா சேர்ந்து ஆட்சி அமைக்கணும்னு ஐடியா பண்ணப்பவே இந்த மற்றும் பலருடைய திட்டம் எல்லாம் என்னன்னு ஃபுல்லா தெரிஞ்சு போச்சு. அப்பவே அவங்க முகமூடி எல்லாம் கிழிய ஆரம்பிச்சிருச்சு. இதுல ஹைலைட் என்னன்னா அவங்க முகமூடி கிழிஞ்சதுன்னு தெரியாமலே கூவிட்டு இருக்காங்க.
சரி யார் என்ன கூவினா நமக்கு என்னங்க? நம்ம ரூட் ஒரே ரூட்தான், ஸ்ட்ரைட் ரூட்தான்.
திமுகவோட கிளை கழகம் அதிமுக
அதனால மதுராந்தகம் தொகுதி மக்களே, இந்த இடைத்தேர்தல்ல நம்ம டிவிகே சார்பா உங்க சகோதரி, நம்ம வீட்டு பெண், என் தங்கச்சி மரகதம் குமரவேலுக்கு தயவு செஞ்சு விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்க. நீங்க விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுறது இந்த பெண்களை அவதூறா, அசிங்கமா, ஆபாசமா பேசுற ஒவ்வொருத்தருக்கும் நீங்க கொடுக்கிற மிகப்பெரிய ஒரு தண்டனையா இருக்கும்.
இந்த திமுகவுக்கோ இல்ல இந்த தீய சக்திக்கும் இல்ல இந்த ஆபாச சக்திக்கும் மற்றும் பலருக்கோ நீங்க ஓட்டு போட்டீங்கன்னா, அது பெண்களை தப்பா பேசுறவங்களை நீங்க ஆதரிக்கிற மாதிரி ஆயிடும். அதனால நம்ம வீட்டு பெண்களை இந்த மாதிரி பேசுனவங்களை நீங்க சும்மாவே விடக்கூடாது, அதுல உறுதியா இருக்கணும்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ன்னு அண்ணா சொன்னார். அப்படி பார்த்தா 108 சீட்டு வாங்கின நாம ஆட்சி அமைக்கணும். ஆனா அது நடந்திடக் கூடாதுன்னு சொல்லிட்டு இந்த திமுகவும் மற்று பலரும் சேர்ந்து ஒரு கூத்து பண்ணாங்க பாருங்க, இந்த மற்றும் பலர் வந்து பாஜகவோட ஒரு பிரான்ச். ஆனா இப்ப பார்த்தீங்கன்னா திமுகவோட ஒரு கிளைக் கழகமாவே மாறிட்டாங்க. இதை நான் சொல்லல, பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் சொல்றாங்க.
அதாவது அவங்களை பொறுத்தவரைக்கும் அனுபவம் அனுபவம்னு சொல்லி மக்கள் காசை கொள்ளை அடிச்சவங்க ஆட்சிக்கு வரலாமா? ஆனா நம்மள மாதிரி சாதாரண குடும்பத்தில இருந்து ஒரு சாமானியர்களோட ஒரு கட்சி ஆட்சிக்கு வரக்கூடாதா? ஏன் தெரியுமா? உங்க விஜயோட ஆட்சி வந்துட்டா… அதாவது பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் வழியில உங்க விஜயோட ஆட்சி வந்துட்டா ஊழல் எல்லாம் செய்ய முடியாது, மக்கள் காசை தொட முடியாது, தொட்டா மாட்டிக்குவாங்கன்னு தெரியும். அதனால இந்த ஆட்சி வரக்கூடாதுன்னு ரெண்டு பேரும் மாறி மாறி திட்டம் போட்டுட்டு இருந்துருக்காங்க.
இதைதானே இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சட்டசபையிலே சொன்னாங்க? ரிசைன் பண்ணிட்டு போன அத்தனை எம்எல்ஏவும் இததானே சொல்றாங்க? மக்கள் காசை தொட மாட்டோம், தொடவும் விடமாட்டோம், தொட்டவர்களையும் விடமாட்டோம்.
அதனாலதான் சட்டசபையில அந்த காலத்தில இருந்து அவங்க செஞ்ச ஊழல் எல்லாம் எடுத்து சொன்னோம். ஊழலின் ஊற்றுக்கண் யாருன்னு சொல்லி இன்னைக்கு இருக்கிற ஜெனரேஷனுக்கு தெரியப்படுத்தனும் இல்லையா? நம்மளுடைய கடமை இல்லையா? அதனாலதான் அந்த காலத்தில் இருக்கிற ஊழல் எல்லாம் எடுத்து சொன்னா, எதிர்கட்சி திமுகவுல இருந்து சொல்றாங்க, ‘அப்பல்லாம் விஜய் பொறக்கவே இல்லை’ன்னு. நான் எப்ப பிறந்தா உங்களுக்கு என்னய்யா?
வரலாறு எடுத்து படிச்சு பார்த்தா உங்களுடைய வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் தெரிய போகுது. திமுக மூலமாதான், அதுக்கு முன்னாடியே ஊழல் எல்லாம் பொறந்துருச்சு. நான் எப்ப பிறந்தா உங்களுக்கு என்ன?
அதாவது அசம்பளில ஒன்னு கவனிச்சீங்களா? ‘ஊழல்’ அப்படின்னு சொல்லிட்டா போதும், ‘ஆதாரத்தை காட்டு’ அப்படின்னுவாங்க. உடனே ஆதாரத்தை காட்டினா, ‘அதெல்லாம் கோர்ட்ல ப்ரூவ் ஆகணும்ல’ அப்படின்னு சொல்லுவாங்க. உடனே அதுக்கு வேற ஏதாவது சொன்னா, ‘கோர்ட்ல பேசுறத பத்தி எல்லாம் இங்க பேசக்கூடாது’ அப்படின்னுவாங்க.
நான்தான் முதல்லயே சொன்னேன், பேச்சை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே சொன்னேன்… ‘நான் இந்த கோர்ட்டு, கேசு, இந்த வழக்கு அதுக்குள்ளெல்லாம் நான் போகவே இல்ல. அத பத்தில்லாம் நாங்க எந்த கமெண்ட்டும் சொல்லல’ அப்படின்னு சொல்லிதான் பேச்சை ஆரம்பிச்சேன். ஆனா அவங்க அதெல்லாம் காதுலயே போட்டுக்கறதில்ல. கத்து கத்து கத்துன்னு கத்துக்கிட்டே இருக்காங்க. ஏன் கத்துறாங்க, எதுக்கு கத்துறாங்கன்னு நமக்கும் தெரிய மாட்டேங்குது. நம்ம வேற இந்த அசம்பளிக்கு ஃபர்ஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ் வேற. அவங்க கத்துறதுக்கு முன்னாடி, அவங்களை மீறி நம்ம பேசுறதா வேண்டாமா அப்படின்ற ஒரு கன்பியூஸ்டு ஸ்டேட்ல நான் நின்னுட்டு இருக்கேன்.
உலகத்துல ஒரே எக்ஸாம்பிள் நான் தான்
ஆனா அவங்களோட இன்டென்ஷன் மட்டும் எனக்கு தெளிவா புரிஞ்சிருச்சு. விஜய பேசவிடக்கூடாது… ‘பேசு பேசு பேசு’ன்னு சொல்லுவாங்களாம், ஆனா பேச ஆரம்பிச்சா பேசவிடக்கூடாது! இதுதான் அவங்களுடைய இன்டென்ஷன். அதனாலதான் அவங்க சத்தத்தை மீறி நான் என் குரலை உயர்த்தி… அதாவது என் குரல்தான் மக்களை போய் ரீச் ஆகணுமா, அதனால நான் இங்க கத்தி பேச வேண்டியதா இருக்கு, வேற வழி இல்லை.
அதாவது அவங்களுக்கு என்னடா இந்த விஜய் 50 வருஷத்துக்கு முன்னாடி இருக்கிற ஊழலை எல்லாம் எடுத்து சொல்றானே, இது இன்னைக்கு 50 வயசுக்குள்ள இருக்கறவங்களுக்கு எல்லாம் இதைப் பற்றி தெரியாதே, இன்னைக்கு இருக்கிற ஜெனரேஷனுக்கு எல்லாம் இதைப் பற்றி தெரியாதே, நம்ம இதை வச்சுதானே ‘மிஸ்டர் கிளீன் மிஸ்டர் கிளீன்’ என்ற இமேஜ் வச்சு ஓட்டிட்டு இருக்கோம்… இவன் என்னடான்னா பழைய கதைய எல்லாம் எடுத்து விட்டுட்டு இருக்கானேன்னு சொல்லி நம்மள பற்றி அசிங்கமா, அவதூறா பேசுறது.
இந்த ‘திக் ஸ்கின்’னு சொல்லுவாங்க கேள்விப்பட்டுருக்கீங்களா? அது உலகத்திலே ஒரே எக்ஸாம்பிள் நான் மட்டும்தான். 30, 34 வருஷமா எல்லாம் பாத்துட்டுதான் இதுக்குள்ள வந்திருக்கேன். அதனால நமக்கு இதெல்லாம் ஒன்னும் புதுசு இல்ல. எனக்கு எப்படி தோணுதுன்னா, எனக்கு இன்னும் பத்தல, நிறைய எதிர்பார்க்கிறேன் என்ற மாதிரிதான் எனக்கு தோணுது.
அதனால ஸ்டாலின் சாருக்கு சொல்லிக்கிறோம், இந்த திமுகவுக்கும் சொல்லிக்கிறோம்… ஊழல் செஞ்ச கூட்டத்தை விடவே மாட்டோம்! இனிமே நீங்க தமிழ்நாட்டு மக்களை ஏமாத்தவும் முடியாது, ஏமாத்த விடவும் போறதில்ல.
சொத்து கணக்கு எவ்வளவுன்னு காட்ட முடியுமா?
இந்த சர்காரியா கமிஷன்ல ஒன்னு சொன்னாங்களே ‘அப்யூசிங் தையர் அஃபிஷியல் பொசிஷன்’ (Abusing their official position), அதை நாங்க ஒரு நாளும் செய்ய மாட்டோம்.
நான் ஏற்கனவே கேட்டதுதான், இங்க நான் திரும்பவும் கேட்கிறேன்… இதுக்கு முன்னாடி நாங்க மக்கள் காசை தொட்டதே இல்லைன்னு உங்களால சொல்ல முடியுமா? இனிமே நாங்க மக்கள் காசை தொடவே மாட்டோம்னு உங்களால சொல்ல முடியுமா? இதுவரைக்கும் நாங்க ஊழலை செஞ்சது இல்லைன்னு உங்களால சொல்ல முடியுமா? அட்லீஸ்ட் இனிமே நாங்க ஊழலை செய்ய மாட்டோம்னுதான் உங்களால சொல்ல முடியுமா? அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி உங்களுடைய சொத்து கணக்கு எவ்வளவு? அரசியலுக்கு வந்ததுக்கு அப்புறம் உங்களுடைய சொத்து கணக்கு எவ்வளவுன்னு காட்ட முடியுமா?
‘நீ என்னப்பா எப்ப பாரு ஸ்டாலின் சார் பத்தியே கேள்வி கேட்டுட்டு இருக்க… அவரே பாவம் இந்த எலக்ஷன்ல இந்த மாதிரி ஆயிப்போச்சு, எதிர்கட்சி தலைவரா கூட இல்ல’ அப்படின்னு சில விமர்சனங்கள் எல்லாம் வரலாம். அவர் தோத்தாலும் ஜெயிச்சாலும் அவர் என் அங்கிள், அவர் என் ஸ்வீட் அங்கிள்.
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டியே! ஒன்னு தூய சக்தி தவெக, இன்னொன்னு தீய சக்தி திமுக. இவ்வளவு நாளா நான் மட்டும்தான் கூவு கூவுன்னு கூவிட்டு இருந்தேன். இன்னைக்கு பார்த்தீங்கன்னா எதிர்கட்சி திமுகவுல இருந்தே சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க, கவனிச்சீங்களா? ‘எங்களுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி’ அப்படின்னு. அதான் வாழ்க்கை… வாழ்க்கை ஒரு வட்டம்டா!
10,000 வச்சு எப்படி பாலம் கட்டுனீங்க?
எந்த மேடைக்கு போனாலும், மேடைக்கு மேடை ‘விஜய் அரசியலுக்கு வந்து ரெண்டு வருஷம் தான் ஆச்சு, ரெண்டு வருஷம்தான் ஆச்சு’ன்னு அழுது புலம்பி தள்ளிக்கிட்டு… ஆமா, நாங்க அரசியலுக்கு குழந்தைதான், தமிழ்நாட்டு மக்களுடைய குழந்தை!
ஆனா இங்க சில பேரு பவளவிழா கட்சியோட பண்ணையார் வீட்டு குழந்தையா இஷ்டத்துக்கு உளறிக்கிட்டு… அதனாலதான் சொல்றோம், திமுகவும் திமுகவோட தலைமையும்தான் நமக்கு போட்டியே. நம்மளோட கேள்வி எப்பவுமே ஸ்டாலின் சாருக்கு மட்டும்தான்.
நான் வந்து ஒரு முதலமைச்சரா பல இடத்துக்கு இன்ஸ்பெக்சனுக்கு போறேன். அதுல ஒரு நாள் ஒரு பாலத்துக்கு போறேன். உடனே ‘நாங்க கட்டின பாலத்து மேல ஏறி நின்னு விஜய் என்ன ஷூட்டிங் எடுக்கிறாரா?’ என்கிறார்கள். எனக்கு ஒரு டவுட் சார். நீங்க கட்டின பாலம்னா எப்படி சார், நீங்களே சொந்தமா காசு கொடுத்து கட்டுனீங்களா சார்? அப்படி கட்டுனீங்கன்னா செக் எல்லாம் எங்கிருந்து சார் போச்சு? கோபாலபுரத்தில இருந்து போச்சா இல்ல சித்தரஞ்சன் சாலையில இருந்து போச்சா?
பாவம், உங்ககிட்டயே 10,000 தானே சார் இருக்கு? 10,000 வச்சு எப்படி சார் பாலம் எல்லாம் கட்டுனீங்க? சொந்தமா கார் கூட இல்லையே சார் உங்ககிட்ட? இதெல்லாம் நீங்க கொடுத்த டீடைல் சார். அந்த டீடைல்ஸ் வச்சு பார்த்தா செலவுக்கு பணமே இல்லாத பரம ஏழையா இருக்கிற நீங்க எப்படி சார் பாலமெல்லாம் கட்டுனீங்க,? ஓ, அந்த கணக்கில் வராத பணத்தை வச்சு அப்படி கட்டுனீங்களா சார்? இதெல்லாம் நாங்க கேட்கல சார், மக்கள் கேக்குறாங்க சார்.
அதாவது முதலமைச்சர் என்கிறது மக்களுடைய சர்வன்ட், வேலைக்காரன். இங்க முதலமைச்சர் மக்களோட முதலாளி கிடையாது. நீங்களும் உங்க குடும்பமும் பேசுறதை பார்த்தா, இந்த தமிழ்நாட்டுக்கு நீங்களும் உங்க குடும்பமும்தான் முதலாளி மாதிரி பேசிக்கிறீங்க.
எலக்ஷனுக்கு முன்னாடி ஒரு கணக்கு ஒன்னு போட்டீங்க. இந்த அரித்மெட்டிக்ஸ், மேத்தமேட்டிக்ஸ் ஒன்னும் வேலை ஆகல. இப்ப இன்னொரு கணக்கு ஒன்னு போட்டுருக்கீங்க, எப்படா குறுக்கு வழியில போய் இந்த ஆட்சியை கலைச்சிரலாம்னு. அதுவும் எங்களுக்கு தெரியும் சார். உங்க கணக்கெல்லாம் ஒன்னத்துக்கும் உதவாத மனக்கணக்கு. எனக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இருக்கிறது அன்பு கணக்கு. இந்த அரசியல் கிரசியல் எல்லாத்தையும் தாண்டின பாச கணக்கு இது.
இந்த திமுகனாலயும் சரி, கூட சேர்ந்து ஒன்னா சேர்ந்து ஆட்சி அமைக்கணும்னு நினைச்ச இந்த மற்றும் பலர்னாலயும் சரி, ஒன்னும் கிழிக்க முடியாது. ஒவ்வொரு வீட்டில இருக்கிற பச்சை குழந்தைல இருந்து பாட்டி, தாத்தா வரைக்கும் என்னுடைய சொந்தங்கள், என்னுடைய உறவுகள்.
நான் இந்த பதவி ஏத்த அன்னைக்கு கொஞ்சம் டைம், கொஞ்சம் அவகாசம் கேட்டேன். இந்த கடன் மேல கடன் வாங்கி, இந்த கஜானா நிலைமை எல்லாம் மோசமா இருக்குது, கொஞ்சம் நிதி நெருக்கடி எல்லாம் இருக்குது, சோ அப்படிப்பட்ட நிலைமையிலதான் நான் பதவி ஏற்கிறேன், அதனால கொஞ்சம் டைம் கேட்டேன். அப்ப கூட என்னால முடிஞ்சதெல்லாம் நான் செய்ய ட்ரை பண்ணிட்டுதான் இருந்தேன்.
‘இப்போ விஜயும் வந்து கடன் தான் வாங்குறாரு’… ஆமா, நான் கடன் வாங்குறேன், கொள்ளை அடிக்கறதுக்காக இல்ல, மக்களுக்கு நல்லது செய்றதுக்காக! கொடுத்த வாக்குறுதியில கொஞ்சமாவது படிப்படியா செய்யணும்ன்றதுக்காக.
ஆறு சிலிண்டர் கொடுக்கறேன்னு சொன்னேன். இப்ப இந்த நிலைமையில என்னால மூணுதான் கொடுக்க முடிஞ்சது. அதை உடனே இம்ப்ளிமெண்ட் பண்ணுங்கன்னு சொல்றேன். உடனே, ‘அவர் ஆறு கொடுக்கறேன்னு சொன்னாரு, மூணுதான் கொடுத்திருக்காரு, பாதிதான் கொடுக்கறாரு, மீதியை காணோம்’னு போய் மக்கள் கிட்ட போய் பேட்டி எடு, மக்களை ஏத்திவிடு… , உங்களுடைய கருத்து என்ன, நல்லா ஏத்தி சொல்லுங்க, நல்லா ஏத்தி சொல்லுங்க’ன்னு கேட்கிறது.
உங்க பாட்ஷால இந்த விஜய் கிட்ட பலிக்காது
உடனே மக்கள், ‘பொறுங்க சார் பொறுங்க, ஏன் பதறுறீங்க, ஏன் கதறுறீங்க? நம்ம வீட்டு புள்ளை விஜய் கொடுக்கும், நம்ம வீட்டு புள்ளை விஜய் கொடுக்கும், நீங்க பதறாதீங்க, நீங்க போயிட்டு வாங்க’ அப்படின்னு மூஞ்சில கரிய பூசி அனுப்பிட்டாங்க.
அடுத்து இந்த கட்டணமில்லா பஸ் வசதி, அதை எக்ஸ்டென்ட் பண்ணினோம். நம்ம அம்மா, அக்கா, தங்கைகள், பாட்டி, பெண் குழந்தைகளுக்கு எல்லாம்… கண்டக்டரோட சேர்ந்து தமிழ்நாட்டில இருக்கிற மொத்த பெண்களும் சேர்ந்து விசில் அடிச்சாங்க பாருங்க, விளவளத்து போயிட்டாங்க! யாரு? இந்த திமுகவும் மற்றும் பலரும்.
பரந்தூர் விஷயத்தில ஒரு டிசிஷன் ஒன்னு எடுத்தோம். 1. சென்னை சிட்டி பாதிக்கப்படக்கூடாது, 2. நீர்நிலைகளை காப்பாத்தணும், 3. விவசாயிகள் பக்கம் நிக்கணும், 4. வளர்ச்சிக்கு எதிரானவன் இல்ல. அதுவும் ப்ரூவ் ஆயிடுச்சு. அதுல அவங்களுக்கு தூக்கம் கெட்டுருச்சு.
அடுத்து இந்த பால் கொள்முதல் விலை, அஞ்சு வருஷத்துல அதை நிறைவேற்றுவோம்னு நாங்க வாக்குறுதி கொடுத்தோம். ஆனா மூணே மாசத்துல அதை நிறைவேற்றி இருக்கிறோம், யாருக்காக? நம்ம விவசாயிகளுக்காக. இதை பார்த்துட்டு இந்த மற்றும் பலர் ஒரு மனு ஒன்னு கொடுக்குறாங்க, ‘அப்ப பால் விற்பனை விலையை ஏத்துவீங்களா?’ அப்படின்னு. மக்கள் கஷ்டப்பட்டா அவங்களுக்கு சந்தோஷம் போல. திமுக மாதிரியேதான் இவங்களும் இருக்காங்க, ஒரு டிஃபரன்ஸும் இல்ல. உங்க பாட்ஷால இந்த விஜய் கிட்ட பலிக்காது சார்.
எம்ஜிஆர் அவர்களும் ஜெயலலிதா மேடமும் வார்த்தைக்கு வார்த்தை ‘தீய சக்தி, தீய சக்தி’ன்னு சொல்லி சொல்லி வந்த இந்த திமுகவோட கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கணும்னு ஒரு பிளான போட்டா, எம்ஜிஆரோட அந்த அப்பழுக்கற்ற தொண்டர்களுக்கு எப்படி அதால ஏத்துக்க முடியும்? எவ்வளவு ஒரு மன வழியில இருந்திருப்பாங்க, மன வேதனையில் இருப்பாங்க?
அதனாலதான் இந்த தொகுதியில எம்எல்ஏவா ஜெயிச்சும் அந்த மன வேதனையை தாங்கிக்க முடியாம அந்த எம்எல்ஏ பதவியை ராஜினாமா பண்ணிட்டு நம்மளோட வந்து ஜாயின் பண்ணிட்டாங்க, என்னோட தங்கச்சி மரகதம் குமரவேல் அவர்கள். மனசுல எவ்வளவு பெயின் இருந்திருக்கும்? அதே பெயின் தானே எம்ஜிஆரோட அப்பழுக்கற்ற அந்த தொண்டர்களுக்கும் இருக்கும்? அதனால எம்ஜிஆர் தொண்டர்களே கவலைப்படாதீங்க, உங்களோட இந்த விஜய் இருப்பான். உங்கள் இந்த விஜய் பார்த்துப்பான். ஒரு தம்பியா, மகனா உங்களோட இருப்பான்.
அன்னைக்கு எம்ஜிஆர் அவர்களுக்கும் இதே தீயசக்தி திமுகதான் எதிரி, ஜெயலலிதா மேடமிற்கும் இதே தீயசக்தி திமுகதான் எதிரி, இன்னைக்கு இந்த விஜய்க்கும் இதே தீயசக்தி திமுகதான் எதிரி. சோ தெரிஞ்சுக்கிட்டாங்க, ‘ஓஹோ இதுதானா அந்த ரூட்’னு தெரிஞ்சுக்கிட்டாங்க. அதனாலதான் கதறல்ஸ் எல்லாம் ஓவரா இருக்குது.
எப்ப பாரு ‘பாஜக உள்ள வந்துரும், பாஜக உள்ள வந்துரும்’னு பூச்சாண்டி வேலை காட்டிட்டு மக்களை ஏமாத்திக்கிட்டு… இப்ப என்ன ஆச்சு? பாஜகவே மூச்சு விட திணறுச்சு. அதான் முன்னாடி சொன்ன மாதிரிதான், திமுக வேற பாஜக வேற எல்லாம் இல்ல. டெல்லில இருக்கிற திமுகவுக்கு பேர்தான் பாஜக, தமிழ்நாட்டில இருக்கிற பாஜகவுக்கு பேர்தான் திமுக! எப்படி? டெல்லியில இருக்கிற திமுகவுக்கு பேர்தான் பாஜக, தமிழ்நாட்டில இருக்கிற பாஜகவுக்கு பேர்தான் திமுக!
இந்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா… எப்படா திரும்ப கொண்டு வருவாங்க, எப்படா அவங்களோட நம்ம சேரலாம், எப்படா அவங்களுக்கு நம்ம சப்போர்ட் பண்ணலாம்னு காத்துக்கிட்டு இருக்காங்க இந்த திமுக. இந்த மதச்சார்பற்ற நிலைப்பாட்டில உங்களால ஒரு நிரந்தரமான ஸ்டாண்ட்ல இருக்க முடியுமா? அப்புறம் ஏன் பாஜக கூட்டணியில் இருக்கிற அதிமுகவோட கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கணும்னு ஏன் பிளான் போட்டீங்க?
திமுகவுல ஒரு பெரியவர் ஒருத்தர் இருக்கிறார். அவர் சொல்றாரு, ‘திமுகவுக்கு ஓட்டு போடாதனால அந்த மக்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராதாம்’. அதே பெரியவர் இன்னொன்னு சொல்றாரு… அதாவது இந்த மதுராந்தகம் தொகுதியில இந்த இடைத்தேர்தல்ல அந்த திமுக வேட்பாளர் ஜெயிச்சிட்டா, ஜனவரி மாசத்தில டிவிகே கட்சியை கலைச்சிருமாம். என்ன ஒரு கான்ஃபிடன்ஸ்! எங்கிருந்து வருது இந்த கான்ஃபிடன்ஸ்? யாரோட நீங்க கூட்டுல இருக்கீங்க? வெளியில தனித்தனியா இருப்பாங்களாம், ஆனா உள்ளுக்குள்ள செம அண்டர்ஸ்டாண்டிங்ல இருப்பாங்களாம்…
நான் முன்னாடியே சொன்ன மாதிரி இந்த திமுக, பாஜக, மற்றும் பலர் எல்லாம் ஒரே கூட்டணி, ஒரே குட்டையில ஊறின மட்டைகள். சார் ஸ்டாலின் சார், உங்ககிட்ட உண்மை இருந்தா, நேர்மை இருந்தா, மனசாட்சி இருந்தா, மூணு பேரும் ஒன்னுதான்னு சொல்லிட்டு போய் தேர்தல்ல நிக்க வேண்டியதுதானே? அதென்ன தனித்தனியா வேஷம் போட்டுக்கிட்டு? இனிமே உங்க வேஷம் எல்லாம் யாரும் நம்புற மாதிரி இல்ல சார், எல்லாம் தெளிவாயிட்டாங்க.
அது என்ன திமுக வேட்பாளர் ஜெயிச்சிட்டா தவெக கலைஞ்சிருமா? எல்லாம் நம்ம சொந்தங்கள் இல்லையா, நம்ம உறவுகள். அவங்க அன்போடு அமைச்சு கொடுத்த இந்த ஆட்சி… இது ஒன்னும் தனிப்பட்ட விஜயோட ஆட்சி இல்ல, தனிப்பட்ட தவெகவோட ஆட்சி இல்ல. அவங்களோட ஆட்சி, மக்களோட ஆட்சி, ஜனநாயக ஆட்சி!
மக்கள் பேராதரவோட வெற்றி பெற்ற நமக்கு… ஆதரவுகரம் நீட்டிய மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி துணையோடு அமைந்திருக்கிற இந்த ஆட்சிக்கு உரிமையாளர்களே யார் தெரியுமா? நீங்கதான், மக்கள்தான். அப்படிப்பட்ட மக்கள் அமைச்சு கொடுத்த இந்த ஆட்சி கலையும்னு சொன்னா, அவங்களோட கனவுதான் கலையும்.
இந்த திமுகவுக்கும் திமுகவோட மறைஞ்சு மறைஞ்சு வேலை செய்ற எல்லாருக்கும் சொல்றோம்… இந்த விஜயை தொடாதீங்க, விஜய் கூட இருக்கிற மக்களை தொடாதீங்க! அப்புறம் ‘ஏன்டா இந்த விஜயை தொட்டோம், ஏன்டா விஜய் கூட இருக்கிற மக்களை தொட்டோம்’னு காலத்துக்கும் புலம்புவீங்க. காஞ்சிபுரம் பேச்சு ஞாபகம் இருக்கா? எலக்ஷனுக்கு முன்னாடி… மறந்துட்டீங்கன்னா போட்டு கேளுங்க.
அதனால மக்களே, இந்த திமுகவையும் பாஜகவையும் மற்றும் பலரையும் ஓரம் கட்ட தயவு செஞ்சு விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க. நம்ம கட்சியை இன்னும் பலமாக்குறதுக்கு தயவு செஞ்சு விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க. நம்ம மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி வேட்பாளரான நம்ம தங்கச்சி மரகதம் குமரவேலை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில மீண்டும் எம்எல்ஏவா ஆக்க வேண்டியது உங்க பொறுப்பு. அதை நல்லா மனசுல வச்சுக்கிட்டு, உங்க ஒரு ஓட்டை கூட வீணாக்கிடாம உங்க வீட்டில இருக்கிற எல்லா ஓட்டையும் உங்க விசில் சின்னத்துக்கே போடணும்.
மதுராந்தகம் தொகுதி பிரச்சினைகள்…
இப்ப இங்க இந்த செங்கல்பட்டு, மதுராந்தகம் தொகுதியில் இருக்கிற சில பிரச்சனைகளை பற்றி நான் இங்க பேசுறேன்…
தமிழக வெற்றிக்கழக அரசு பதவி ஏற்ற பின், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கீழ்க்கண்ட அறிவிப்புகள் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிடப்பட்டு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் பல்வேறு நிலையில் உள்ளன:
செங்கல்பட்டு மாவட்டத்தில் வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சமூக நீதி விடுதிகளுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டித்தர அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உணவு தானியங்களை சேமிப்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் சேமிப்பு கிடங்கு கட்ட அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு தாய்-சேய் நலக்கட்டிடம், புதிய உயர் அடுக்கு ஒருங்கிணைந்த வெளிநோயாளிகள் பிரிவு கட்டிடம், மாணவர்களுக்கான தங்கும் விடுதி, தாய் மற்றும் பிறந்த குழந்தைகள் பராமரிப்பு பிரிவுகள் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் அமைக்க அறிவிக்கப்பட்டு நடவடிக்கையில் உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மதுராந்தகம் ஏரியில் உள்ள மதகு எண் 5 பாசன கால்வாயை கான்கிரீட் கால்வாயாக சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் தொகுதியின் மக்கள் தேவைகள்
இந்த நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், சென்னை மாநகரை ஒட்டியுள்ள தொகுதியாக இருந்தும், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என்ற நிலை உள்ளது என் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறிப்பாக, விவசாயிகளுடைய நீண்ட நாள் கோரிக்கையான பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட தடுப்பணை அமைக்காமலும், ஏரிகளின் மாவட்டம் என்ற சிறப்பு பெயர் இருந்தும் கூட ஏரிகளை புனரமைக்காமலும், கால்வாய்களை தூர்வாராமலும் சீரமைக்காமலும் வஞ்சித்துள்ளனர். இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் மணிகளை பாதுகாக்கும் வகையில் பெரிய கொள்ளளவு கொண்ட குடோன்கள் அமைக்காமலும், நிரந்தர கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்தாமலும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் கடந்த ஆட்சியாளர்கள் இருந்துள்ளனர்.
அச்சரப்பாக்கம் சென்னைக்கு மிக அருகாமையில் இருந்தும், பெண் கல்விக்கு முக்கியத்துவம் தராமல் மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேவை இருந்தும் கடந்த ஆட்சியாளர்கள் அந்த கோரிக்கையை கிடப்பில் போட்டனர். அதேபோல் புக்கத்துறையில் உள்ள கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி அரசு மேல்நிலைப்பள்ளி உருவாக்கப்படவில்லை. மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படவில்லை. பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் பெண்களுக்கும் தங்கும் விடுதி வசதி செய்து தரப்படவில்லை. இந்த பகுதி சென்னைக்கு அருகாமையில் இருந்தும், அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக இருந்தும், குடியிருப்புகள் தேவை இருந்தும் முந்தைய ஆட்சியாளர்கள் வீடற்றவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் போதுமான அளவில் கட்டித்தராமல் இருக்கும் நிலை உள்ளது.
கடல் போல் காட்சி அளிக்கும் மதுராந்தகம் ஏரி சுற்றுலாத் தளமாக மேம்படுத்தப்படவில்லை. தொகுதி மக்களின் கோரிக்கைகள் மற்றும் உங்களுடைய தேவையான அத்தியாவசிய வசதிகள் அனைத்தும் நேரடியாக தெரிந்து கொண்டேன். உங்களுடைய தேவைகள் எங்களுக்கு புரிகிறது. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே நமது அரசு உள்ளது. உங்களின் தேவைகளை அறிந்து செயல்படும் அரசிற்கு உங்கள் பேராதரவை அளிக்க கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய உரைய முடிப்பதற்கு முன்… என் மனசுல இருக்கிற ஒரு பெரிய வேதனையான ஒரு விஷயத்தை உங்ககிட்ட நான் ஷேர் பண்ணனும்னு நினைக்கிறேன்.
வீரமணி விவகாரம்… இதுல கூடவா கூட்டு?
இந்த திமுகவுக்கு நம்ம மேல எந்த குற்றச்சாட்டும் வைக்க முடியலையா என்ற அந்த விரக்தியில, அந்த கடுப்புல ஒரு டேஞ்சரான ஒரு வெப்பனை கையில் எடுத்திருக்காங்க. என் சொந்த தாயை, என்னை பெத்த தாயை, என் அம்மாவை அவங்க தப்பா பேசும்போது கூட நான் பொறுத்துக்கிட்டேன். ஆனா தமிழ்நாட்டில் இருக்கிற என்னுடைய அம்மா, அக்கா, தங்கைகள், என்கூட துணையா இருக்கிற, எனக்கு தாய் அன்பு காட்டுற என்னுடைய தமிழ்நாட்டு பெண்கள்… அவங்களை அசிங்கமா பேசும்போதுதான் திமுக தலைமையும் இந்த மாதிரிதான் பேசுறாங்க, திமுக குடும்பத்தில இருந்து இந்த மாதிரிதான் பேசுறாங்க. அதை பழக்க தோஷத்தில ஸ்டாலின் சாரும் அந்த குடும்பத்தில் இருக்கிறவங்களும் உட்கார்ந்து ரசிக்கிறாங்க. இதை இனிமே யாரும் பொறுத்துக்கவே முடியாது!
அதுமட்டும்ல்ல, இது இன்னொரு ஒரு கொடுமையான விஷயம் இங்க இப்ப நடந்துகிட்டு இருக்கு. அதை பற்றி பேச வேண்டாம்னுதான் நினைச்சேன். நம்ம தமிழ்நாட்டு இளம் பெண்களை, அந்த பச்சை பிள்ளைகளை ஒருத்தன் இத்தனை வருஷமா சீரழிச்சுக்கிட்டு இருந்திருக்கான்.
அந்த கேஸ் போன டிஎம்கே கவர்மெண்ட்ல வந்தும் அந்த கேஸ, அந்த சாப்ட்டர, அந்த ஹிஸ்டரியவே எல்லாம் மூடி மறைச்சிட்டாங்க. என்ன டீலிங் நடக்குது உள்ளுக்குள்ள? தமிழ்நாடு கேள்வி கேட்குது சார்! வாய திறங்க சார் ஸ்டாலின் சார், வாய திறங்க!
உங்களோட சேர்ந்த அந்த மற்றும் பலரும் வாய திறக்காம இருக்காங்க. இதுல கூடவா கூட்டு? இதுல கூடவா கூட்டு சேர்ந்துக்கிட்டு வாய திறக்காம இருப்பீங்க?
என்னமோ பெண்கள் பாதுகாப்புக்குனே பிறந்த மாதிரி இந்த திமுகவும் இந்த மற்றும் பலரும்… அந்த அத்தனை பெண்களை சீரழிச்சானே, தூக்கி உள்ள வச்சிட்டோம். இப்போ அவனை பற்றியும் வாய திறக்கல, அந்த ஆளை பற்றியும் வாய திறக்கல. என்னடா இத்தனை வருஷமா மூடி மறைச்சு வச்சிருந்த ஒரு விஷயத்தை விஜய் வந்தவுடனே தோண்டி எடுத்து, வெளிய எடுத்து அவனை உள்ள தூக்கி வச்சுட்டான்… அந்த அதிர்ச்சியில வாய திறக்காம இருக்காங்களோ என்னமோ எனக்கு தெரியல.
எல்லாம் பச்சை பிள்ளைங்க சார், பச்சை பிள்ளைங்க! அவங்களோட வலியை பற்றி வந்து வெளியில பேச முடியலனா அப்புறம் என்ன அரசியல் பண்ணிட்டு இருக்கீங்க? என்ன அரசியல் பண்ணிட்டு இருக்கீங்க இத்தனை வருஷமா?
அதனால மக்களே, இந்த இடைத்தேர்தல்ல இந்த ரெண்டு பேருக்கும், இந்த தீய சக்திக்கும் இந்த மற்றும் பலருக்கும் நீங்க சரியான ஒரு பாடம் புகட்டி ஆகணும்” என்று கூறி வாக்கு சேகரித்தார்.
