தீயணைப்பு துறை டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் டிஜிபியாக செயல்பட்டு வந்த சீமா அகர்வால் இன்று (ஜூன் 30) பணி ஓய்வு பெற்றார்.
இதையொட்டி கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில், காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
சீமா அகர்வால் ஓய்வு பெற்ற நிலையில், இந்தத் துறைக்கு புதிய டிஜிபி வெங்கடராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலர் பிறப்பித்துள்ளார்.
முன்னதாக, தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, வெங்கடராமன் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
புதிய ஆட்சி அமைந்த நிலையில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார். தற்போது தீயணைப்பு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
