ADVERTISEMENT

வேல்முருகன் உருவாக்கிய தமிழர் வாழ்வுரிமைக் கூட்டணி- ’கேமரா’ சின்னத்தில் போட்டி-100 வேட்பாளர்கள் அறிவிப்பு!

Published On:

| By Mathi

Velmurugan

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், தமிழர் வாழ்வுரிமைக் கூட்டணியை உருவாக்கி உள்ளார். இந்த தேர்தலில் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டணி 234 தொகுதிகளிலும் கேமரா சின்னத்தில் போட்டியிடும் என வேல்முருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வேல்முருகன் கூறுகையில், “தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கேமரா சின்னம் இந்தத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்காக வழங்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைமையில் இந்தத் தேர்தலில் நாங்கள் தமிழ், தமிழ்நாடு, தமிழர் வாழ்வுரிமை, இங்கு சமூகத்தில் நடக்கிற சமூக அநீதி மற்றும் சமூக நீதி, சமநீதி, சமத்துவம், கனிம வளக் கொள்ளை, லஞ்சம், லாவண்யம், ஊழல், முறைகேடுகள் என்று பல்வேறு மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு ஒரு தமிழ்ச் சமூகக் கூட்டமைப்பைக் கொண்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சுமார் 35-க்கும் மேற்பட்ட இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள்…

ஒரு உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், இங்கே அமர்ந்திருக்கின்ற திரு. செந்தில்குமார் அவர்கள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சித் தலைவராகவும், தனிச் சின்னத்தில் தொடர்ந்து போட்டியிடக்கூடிய ஒரு தலைவராகவும் இருக்கிறார். இங்கே இருக்கிற தடாதகை அம்மு உள்ளிட்ட திரு. செந்தில் மல்லர் மற்றும் இங்கே இருக்கிற ஆறுமுகராஜா வழக்கறிஞர், . மூர்த்தி உள்ளிட்ட எல்லாத் தலைவர்களும் இவர்கள் தமிழ்ச் சமூகத்திற்காகப் பல்வேறு பணிகளை அவரவர்கள் தளத்தில் நின்று இந்த மண்ணுக்கும், மக்களுக்கும், மொழிக்கும், இனத்திற்கும், சமூக நீதிக்கும் போராடக்கூடியவர்கள்.

ADVERTISEMENT

இது போன்று ஒரு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் தமிழக நிலத்தில் இருக்கின்ற அந்தந்த வட்டார, மாவட்ட அளவிலான, மண்டல அளவிலான மக்களுடைய பிரச்சினைகளுக்காகப் போராடக்கூடிய போராளிக் குழுக்களில் ஈடுபட்டிருந்த தலைமைகளும் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமையின் கீழ் ‘தமிழர் வாழ்வுரிமை கூட்டணி’ என்கிற ஒரு கூட்டணியை உருவாக்கி, தமிழ்நாட்டில் இருக்கிற 234 தொகுதிகளிலும் இந்த 2026 தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு செய்திருக்கிறோம் என்றார்.

மேலும் முதல் கட்டமாக 100 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் வேல்முருகன் அறிவித்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share