பிளஸ் 2 முடிச்ச தம்பி, தங்கச்சிகளுக்கு ‘மெகா’ ராணுவ வேலை! யூபிஎஸ்சி (UPSC) என்டிஏ அதிரடி அறிவிப்பு

Published On:

| By Santhosh Raj Saravanan

upsc nda 2 recruitment 2026 394 vacancies apply online details tamil

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA & NA II Exam 2026) மெகா சேர்க்கை அறிவிப்பை அதிரடியா தட்டி விட்டுருக்கு! 394 காலிப்பணியிடங்கள்! மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் புகழ்பெற்ற தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA – Khadakwasla) மற்றும் இந்திய கடற்படை அகாடமியில் (INA – Ezhimala) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய ஆன்லைன் விண்ணப்பப் பதிவை யூபிஎஸ்சி (UPSC) நேற்று (மே 20, 2026) முதல் தொடங்கியுள்ளது.

எந்தெந்தப் பிரிவுகளில் ஜாக்பாட்?

தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA):

ADVERTISEMENT

ராணுவம் (Indian Army): 208 இடங்கள் (இதில் பெண்களுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன).

கடற்படை (Indian Navy): 42 இடங்கள் (இதில் பெண்களுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன).

ADVERTISEMENT

விமானப்படை (Air Force): ஃபிளையிங் (Flying) – 92 இடங்கள் (பெண்களுக்கு 2 இடங்கள்).

கிரவுண்ட் டியூட்டி – டெக்னிக்கல் (Tech) – 18 இடங்கள் (பெண்களுக்கு 2 இடங்கள்).

ADVERTISEMENT

கிரவுண்ட் டியூட்டி – நான் டெக்னிக்கல் (Non-Tech) – 10 இடங்கள் (பெண்களுக்கு 2 இடங்கள்).

கடற்படை அகாடமி (Naval Academy – 10+2 Cadet Entry Scheme): 24 இடங்கள் (இதில் பெண்களுக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன).

மாதாந்திர ஊக்கத்தொகை (Stipend): அகாடமியில் நீங்க படித்துப் பயிற்சி பெறும் காலத்திலேயே அரசாங்கம் சார்பாக மாதம் **ரூ. 56,100 (Level 10)** பக்கா ஸ்டைபெண்டாக வழங்கும் பாஸ்! பயிற்சி முடிந்து அதிகாரியாகப் பொறுப்பேற்றதும் ஏகப்பட்ட சலுகைகளுடன் லட்சங்களில் சம்பளம் எகிறும்.

யாரெல்லாம் இந்த ஜாக்பாட்டைத் தட்டலாம்?

திருமணமாகாதவராக இருக்க வேண்டும்: இந்தத் தேர்வுக்குத் திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் பாஸ்!

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01 ஜனவரி 2008-க்கு முன்பாகவும், 01 ஜனவரி 2011-க்கு பின்பாகவும் பிறந்திருக்கக் கூடாது பாஸ்! (அதாவது 16.5 முதல் 19.5 வயதிற்குள் இருக்க வேண்டும்).

கல்வித்தகுதி (ராணுவப் பிரிவு – Army Wing): நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் 12-ஆம் வகுப்பு (+2) தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், ஆர்ட்ஸ் அல்லது சயின்ஸ் குரூப் தம்பிகள் தாராளமாக அப்ளை பண்ணலாம்.

கல்வித்தகுதி (கடற்படை & விமானப்படை): நீங்கள் 12ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் (Physics, Chemistry, Mathematics) பாடங்களை எடுத்துப் படித்துப் பாஸ் செய்திருக்க வேண்டும் பாஸ்!

+2 தேர்வு எழுதியவர்களும் வரலாம்: இப்போ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிட்டு ரிசல்ட்டுக்காக வெயிட் பண்ற அல்லது நடப்பு ஆண்டு 12-வது படிக்கும் மாணவர்களும் (Appearing Candidates) தாராளமாக இதற்கு விண்ணப்பிக்கலாம்! (ஆனால் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது).

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 9, 2026 (மாலை 6:00 மணி வரை மட்டுமே போர்ட்டல் ஓப்பனா இருக்கும்!).

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: வரும் செப்டம்பர் 13, 2026 (ஞாயிற்றுக்கிழமை).

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

முதலில் யூபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் விண்ணப்பப் பக்க இணையதளமான upsconline.nic.in என்ற முகவரிக்குச் செல்ல வேண்டும். அங்கே உங்களது ஒற்றை முறை பதிவு (One Time Registration – OTR) ஐடி வச்சு லாகின் செய்யுங்க. OTR இல்லையெனில், புதிய கணக்கை உடனே உருவாக்குங்கள். லாகின் செய்த பிறகு, “National Defence Academy & Naval Academy Examination (II), 2026” என்ற லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.

பார்ட்-1 மற்றும் பார்ட்-2 விண்ணப்பப் படிவத்தில் உங்களது தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதிகள் மற்றும் உங்களது மூன்று பாதுகாப்புப் படை விருப்ப முன்னுரிமைகளை (Army, Navy, Air Force Preference) பிழையின்றி பூர்த்தி செய்ய வேண்டும் பாஸ். உங்களது அண்மைக்கால பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கையெழுத்து மற்றும் ஏதேனும் ஒரு அரசு அடையாள அட்டை (ஆதார் அல்லது பான் கார்டு) நகலை ஸ்கேன் செய்து அப்லோட் பண்ணுங்க.

பொது மற்றும் ஓபிசி (Gen/OBC) பிரிவினர் ரூ. 100 விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணப்பதாரர்கள் மற்றும் ஜேசிஓ/என்சிஓ வார்டுகளுக்கு எவ்வித கட்டணமும் இல்லை, முற்றிலும் இலவசம். இறுதியாக அப்ளிகேஷனை சப்மிட் செய்து அதை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வச்சுக்கோங்க.

இது யூபிஎஸ்சி நடத்தும் தேசிய அளவிலான தேர்வு என்பதால், இரண்டு தாள்கள் கொண்ட எழுத்துத் தேர்வு (கணிதம் – 300 மதிப்பெண்கள், பொது அறிவு [GAT] – 600 மதிப்பெண்கள்) அப்ஜெக்டிவ் முறையில் (MCQs) நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 5 நாட்கள் நடக்கும் புகழ்பெற்ற எஸ்எஸ்பி (SSB Interview) ஆளுமை மற்றும் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவீர்கள். முன்பு ஆண்களுக்கு மட்டுமே இருந்த இந்த பாதுகாப்புப் படை அதிகாரி வேலை, இப்போ நம்ம ஊர் வீராங்கனை தங்கச்சிகளுக்கும் ஓப்பனா இருக்கு! ராணுவம், கடற்படை என எல்லா விங்சிலும் உங்களுக்கும் தனி இடங்கள் காத்துக்கிட்டு இருக்கு பாஸ்.

நம்ம தமிழ்நாட்டுத் தம்பிகள் வடமாநிலங்களுக்குப் போய் எக்ஸாம் எழுத தேவையில்லை பாஸ், சென்னையிலேயே இதற்கான யூபிஎஸ்சி தேர்வு மையங்கள் அமைக்கப்படும். அப்ளிகேஷன் போடும்போதே உங்களுக்குப் பக்கத்துல இருக்குற சென்டரைத் தேர்ந்தெடுங்க. ஜூன் 9 மாலை 6 மணியுடன் அப்ளிகேஷன் க்ளோஸ் ஆகிடும். சர்வர் பிஸி ஆகுறதுக்கு முன்னாடியே இந்த வாரமே உங்க ஆன்லைன் விண்ணப்பத்தைத் தட்டி விடுங்க பாஸ்!

இந்தியப் பாதுகாப்புப் படைகள்ல ஒரு மிக உயரிய அதிகாரி (Officer Cadre) அந்தஸ்தை வெறும் 12-வது தகுதியிலேயே பெறக்கூடிய ஒரு பிரம்மாண்டமான ‘கோல்டன் டிக்கெட்’ இது பாஸ். உங்க கடின உழைப்பும், தேசப் பற்றும் இருந்தா இந்த 2026-ல நீங்களும் ஒரு கெத்தான ராணுவ அதிகாரி ஆகலாம். முறையா திட்டமிட்டு முயற்சி பண்ணuனா, இந்த மே/ஜூன் மாசத்துல உங்க வாழ்க்கையில ஒரு மாஸ் மற்றும் கம்பீரமான டர்னிங் பாயிண்டா அமையலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share