UPI மூலம் கடன் வாங்குறீங்களா? CIBIL ஸ்கோர் பாதிக்கப்படுமா? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

Published On:

| By Minnambalam Desk

UPI மூலம் பணம் செலுத்துவது வழக்கமான நடைமுறையாகிவிட்ட நிலையில், தற்போது வங்கி வழங்கும் Credit Line on UPI வசதியும் பயன்பாட்டில் உள்ளது.

வங்கிக் கணக்கில் பணம் இல்லாத நேரத்திலும், முன்கூட்டியே ஒப்புதல் பெற்ற கடன் வரம்பை பயன்படுத்தி UPI மூலம் பணம் செலுத்த இந்த வசதி உதவுகிறது.

ADVERTISEMENT

ஆனால், இதைப் பயன்படுத்தும்போது CIBIL ஸ்கோரில் ஏற்படும் தாக்கத்தை கவனிக்க வேண்டும். 

UPI Credit Line என்றால் என்ன?

ADVERTISEMENT

Credit Line on UPI என்பது வங்கி வழங்கும் முன் அனுமதிக்கப்பட்ட சுழலும் கடன் வசதி. UPI செயலியில் இதை இணைத்த பிறகு, QR Code மூலம் பணம் செலுத்தும்போது வங்கிக் கணக்குக்கு பதிலாக இந்தக் கடன் வரம்பைத் தேர்வு செய்யலாம்.

கிரெடிட் கார்டு இல்லாமலேயே கடன் வசதியைப் பயன்படுத்த முடியும் என்பதுதான் இதன் முக்கிய அம்சம்.

ADVERTISEMENT

CIBIL ஸ்கோரில் என்ன தாக்கம்?

UPI Credit Line தனிநபர் பெயரில் கடன் வசதியாகக் கருதப்படுகிறது. இதுதொடர்பான தகவல்களை வங்கிகள் கடன் தகவல் நிறுவனங்களுக்கு அறிக்கையாக அனுப்புகின்றன. 

மேலும், கடன் வரம்பை வழங்கும்போது வங்கி CIBIL உள்ளிட்ட கடன் வரலாற்றை சரிபார்க்கலாம். கடனை அதிகமாகப் பயன்படுத்துவது Credit Utilisation Ratio-வையும் உயர்த்தக்கூடும்.

சரியான நேரத்தில் பணம் செலுத்துவது முக்கியம்

UPI Credit Line-க்கு வங்கி Billing Cycle மற்றும் Due Date நிர்ணயிக்கும். குறிப்பிட்ட காலத்துக்குள் தொகையை திருப்பிச் செலுத்தாமல் இருந்தால், அபராதம் மட்டுமின்றி கடன் அறிக்கையிலும் எதிர்மறையான பதிவு ஏற்படலாம். இதனால் எதிர்காலத்தில் கடன் பெறுவதிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 

கிரெடிட் கார்டைப் போலவே இதுவும் கடன் சார்ந்த வசதி என்பதால், பயன்படுத்தும் தொகை மற்றும் திருப்பிச் செலுத்தும் காலத்தை கவனமாக கையாள வேண்டியது அவசியம்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share