காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினிடம், முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா பற்றி அவதூறாக பேசியது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து தற்போது அவர் விடுவிக்கப்பட்டார்.
இதன்பின் காவல்நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவருக்கு திமுகவினர் மாலை அணிவித்து கொண்டாடினர்.
காவல்நிலையத்துக்கு வெளியே பட்டாசு வெடித்து கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து திறந்த வெளி வாகனத்தில் ஏறி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தபடி, உதயநிதி ஸ்டாலின் சிறிது தூரம் ரோடு ஷோ செல்கிறார்.
பின்னர் கார் மூலம் திருச்சி வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வருகைத்தரவுள்ளார்,
இரவு 10.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
