கைதாகும் போது மகனிடம் உதயநிதி சொன்ன 4 வார்த்தை!

Published On:

| By Kavi

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட போது, தனது மகன் இன்பன் உதயநிதியை கட்டியணைத்துச் சென்றது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தஞ்சை போலீசாரால் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 4) விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். உதயநிதி வீட்டுக்கு போலீசார் வந்தபோது அவர்களுடன் கிருத்திகா உதயநிதி பேச்சுவார்த்தை நடத்தினார்.

ADVERTISEMENT

இதன்பின்னர் நீண்ட நேரம் உதயநிதி வீட்டில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பின்னர் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

அப்போது, தனது மகன் இன்பனை கட்டியணைத்து  “கவலைப்படாதே, நான் திரும்பி வந்துவிடுவேன் (“Don’t worry, I’ll return.”)” என்று ஆறுதல் கூறும் உணர்ச்சிபூர்வமான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

தற்போது தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டத்தில் உள்ள செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இன்றுக்குள் அவரை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், சற்று நேரத்தில் உதயநிதி விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

தொடர்ந்து திருச்சிக்கு கார் மூலம் வரும் உதயநிதி அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புவார் என தகவல்கள் வருகின்றன.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share