முதல்வர் விஜய் மற்றும் நடிகர் திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 4) கைது செய்யப்பட்டார்.
தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் தஞ்சை எஸ்பி சுந்தரவர்தன், திருவிடைமருதூர் டிஎஸ்பி அன்பழகன் ஆகியோர் விசாரித்தனர்.
காவல் நிலையத்தில் மாலை 6.50 மணி அளவில் தொடங்கிய விசாரணை இரவு 8.10 மணி அளவில் நிறைவடைந்தது.
இதன்பின் செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு கார் மூலம் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார்.
அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”நேற்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக, தலைவரின் உத்தரவின்படி தஞ்சாவூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்தோம்.
அதில் கூட்டணி கட்சித் தலைவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். நானும் சுமார் 25 நிமிடங்கள் வரை உரையாற்றினேன்
முழுக்க முழுக்க இந்த ஆட்சி அமைஞ்ச பிறகு விவசாயிகளுக்கு என்னென்ன விதமான துரோகங்களை செஞ்சிருக்காங்க, தேர்தல் வாக்குறுதின்னு பொய் வாக்குறுதிகள் சொல்லி விவசாயிகளை எப்படி ஏமாற்றி இருக்காங்க,
மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மிக தீவிரமாக முயற்சி பண்ணிட்டு இருக்கு, அங்க இருக்கக்கூடிய முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மேகதாது அணை கட்டுவோம்னு தொடர்ந்து சொல்லிட்டு இருக்காரு. தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டிய தண்ணியையும் திறந்து விடல.
எங்களுடைய தலைவர் முதலமைச்சரா இருக்கும்போது ஒவ்வொரு வருடமும் ஜூன் மாசம் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில இருந்து தண்ணீர் திறந்துவிட்டார்.
சொல்லப்போனா சில ஆண்டு ஜூன் 12-க்கு முன்னாடியே தலைவர் விவசாயிகளுக்காக தண்ணியை திறந்து விட்டுருக்காங்க.
ஆனா ஐந்து வருடங்களுக்கு பிறகு இந்த வருஷம் ஜூன் மாசம் போய், ஜூலை மாசம் போய், ஆகஸ்ட் மாசம் வந்துருச்சு… இதுவரைக்கும் தண்ணீர் திறக்கப்படல. அதற்கான வக்கு இல்லை இந்த அரசுக்கு! தண்ணியை கேட்டு பெறுவதற்கும் வக்கு இல்லை, கர்நாடகாவை எதிர்த்து பேசுறதுக்கு வக்கு இல்லை, தைரியம் இல்லை, தெம்பு இல்லை! எனவே இந்த முதலமைச்சர் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.
சட்டசபையில பேசும்போது சொன்னேன், ‘அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்க, இது ஒரு தனிப்பட்ட கட்சியுடைய பிரச்சனை கிடையாது, இது நம்ம மாநிலத்துடைய அனைத்து விவசாயிகளுடைய பிரச்சனை, நம்ம அனைவரும் ஒன்றாக சேர்ந்து போராடுவோம், நம்ம ஒத்துமையை காட்டுவோம்’னு தொடர்ந்து நான் சொன்னேன்.
அதற்கும் பதில் சொல்லல. இதையெல்லாம் நேத்து வலியுறுத்தி பேசினேன். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு அமைச்சரும் இந்த மூணு மாத காலங்கள்ல என்னென்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு ஆதாரத்தோடு குறிப்பிட்டு பேசினேன். அதற்கெல்லாம் பதில் சொல்றதுக்கு தெம்பில்லாத, திராணி இல்லாத, வக்கு இல்லாத ஒரு முதலமைச்சர்… ஒரு டம்மி முதலமைச்சர் நமக்கு வாய்த்திருக்கிறார்.
அதெல்லாம் விட்டுட்டு, நான் பேசாத ஒரு விஷயத்தை கட் காப்பி பேஸ்ட் பண்ணி, சில விஷயங்களை ஆட் பண்ணி… நான் யாரையும் தவறாக பேசவில்லை. முழுக்க முழுக்க விவசாயிகளுக்காகதான் பேசினேன்.
அவங்களுடைய பாலிசியே வந்து டைவர்ஷன் டாக்டிக்ஸ் (Diversion tactics) தான்! முழுக்க முழுக்க ஃபேக் நியூஸ் (Fake news), டைவர்ஷன். ஏதாவது ஒரு பிரச்சனை மாநிலத்தில எழும்போது அதை டைவர்ட் பண்றதுக்கு வேற ஏதாவது ஒரு பிரச்சனைய எடுக்க வேண்டியது.
முதலமைச்சர் ஒரு போட்டோ ஷூட் நடத்த வேண்டியது, திமுகவுடைய திட்டங்களை அப்படியே சுத்தி பார்க்க வேண்டியது, போஸ் கொடுக்க வேண்டியது, ரீல்ஸ் போடுறது.
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களா பள்ளிக்கூடத்துக்கு போய் அங்க இருக்கக்கூடிய மாணவர்கள் எல்லாம் வர சொல்லி அவங்க கட்சி பேரை சொல்லி கோஷம் போட சொல்லி அதை ரீல்ஸா போடுறது.
அவங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் மேல அவங்களுடைய நிர்வாகிகளே இதுவரைக்கும் பல்வேறு குற்றங்களை சொல்லி இருக்காங்க, பாலியல் குற்றங்கள் சொல்லிருக்காங்க. அதற்கெல்லாம் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. எல்லாத்துக்கும் ஒரு டைவர்ஷன் டாக்டிக்ஸ் யூஸ் பண்றாரு, இந்த முதலமைச்சர்.
அது மாதிரி இன்னைக்கு நேத்து நான் பேசின பிறகு அது விவசாயிகளிடத்தில மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்ற பிறகு, விவசாயிகளிடத்தில மிகப்பெரிய ஒரு எழுச்சி ஏற்பட்ட பிறகு அதை எப்படியாவது டைவர்ட் பண்ணனும், நாளைக்கு சட்டமன்ற வேலை ஆரம்பிக்கும் போது சட்டமன்றத்தில நிச்சயம் இந்த டாபிக் பேசுவாங்க, எதிர்க்கட்சி இந்த பிரச்சனையை எழுப்பும் அப்படின்னு தெரிஞ்சுக்கிட்டு அதை முடக்கணும்னு டைவர்ஷன் பன்றாங்க.
இன்னைக்கு காலையில நான் பேசாத ஒரு விஷயத்தை பேசுனதா திரிச்சு, கட் காப்பி பேஸ்ட் பண்ணி அதை நேஷனல் மீடியா வரைக்கும் கொடுத்து பரவ வச்சு, காலைல காவல்துறை வந்து என்ன கைது செய்ய போறேன்னு வந்தாங்க. கைது செய்ய போறதா சொன்னாங்க. நானும் சரி, நான் முழு ஒத்துழைப்பு தரேன்னு சொல்லி அவங்களோட போனேன்.
கைது செய்யப்படும் போதே நான் பத்திரிகையாளர கேட்கும்போது சொன்னேன், ‘ரொம்ப நகைச்சுவையா பாக்குறேன், இது ஒரு காமெடியா பாக்குறேன். நான் பேசாத ஒரு விஷயத்தை பேசுனதா கதைவிட்டு என்ன கைது செய்ய பாக்குறாங்க, என்ன முடக்க பாக்குறாங்க, என்ன மிரட்ட பாக்குறாங்க. இதுக்கெல்லாம் பயப்படக்கூடிய ஆள் நான் கிடையாது!
நான் கலைஞர் பேரன், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய பையன், திராவிட முன்னேற்றக் கழகத்துடைய உடன்பிறப்புகள்ல ஒருத்தன் நானு. நான் இதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன். நான் ஃபேஸ் பண்ணுறதுக்கு தயாரா இருக்கேன்’ அப்படின்னு சொன்னேன்.”
“அதே மாதிரி கோர்ட்டுக்கு போயி என்ன சொல்லிருக்காங்க அரசு வழக்கறிஞர்… ‘அவரை கைது செய்யற நோக்கமே எங்களுக்கு கிடையாது, ஜஸ்ட் விசாரணைக்கு கூட்டிட்டு போறோம்’ அப்படின்னு சொல்லி, அரசு செலவுல மக்கள் வரிப்பணத்தில கிட்டத்தட்ட ஒரு 3000 காவலர்கள் பாதுகாப்போடு ஒரு டெரரிஸ்ட்ட கூட்டிட்டு போற மாதிரி சென்னையிலிருந்து சாலை வழியாக 400 கிலோமீட்டர் தஞ்சாவூர் வரைக்கும் கூட்டிட்டு போனாங்க.
எங்களை முறையா பார்த்துக்கல. தஞ்சாவூர் கூட்டிட்டு போனோம், ஆனா தஞ்சாவூர் கூட்டிட்டு போகாம நடுவுல செங்கிப்பட்டின்ற ஒரு காவல் நிலையத்தில இறக்கி அங்க விசாரணை என்ற பேர்ல பல கேள்விகளை கேட்டு இன்னைக்கு அனுப்பி வச்சிருக்காங்க. இதை நாங்க சட்டப்படி நிச்சயமா சந்திப்போம்.
நான் இந்த நேரத்துல கூறிக்கொள்ள விரும்புகிறேன்… நான் எந்தவிதமான ஒரு தவறான எண்ணத்துல நேத்து பேசவே இல்லை. யாரையும் புண்படுத்தணும், யாரையும் தாழ்த்தி பேசணும், குறிப்பிட்ட பெண்களை குறிப்பிட்டு சொன்னா பெண்களை தாழ்த்தி பேசணும்னு துளி கூட என்னுடைய மனசுல அது கிடையாது!
என்னுடைய பெற்றோர், என்னுடைய குடும்பம் என்னை அப்படி வளர்க்கல. என்னுடைய தாய், தந்தை… என்னை அப்படி வளர்க்கல. எனக்கு திருமணமாகி ஒரு மனைவி இருக்காங்க, அவங்க கூடதான் நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்காங்க, எனக்கு ஒரு தங்கை இருக்காங்க, எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கின்றது. தமிழ்நாட்டில இருக்கக்கூடிய ஒவ்வொரு தாய்மாரையும் என்னுடைய குடும்பமாக, என்னுடைய தாயாக, என்னுடைய தங்கையாக நான் பார்த்து அப்படித்தான் நான் நினைச்சுட்டு இருக்கேன்.
இந்த பொய் வழக்கு போட்டு என்னை பயமுறுத்தலாம்னு இந்த அரசு நினைச்சாங்க. அதற்கெல்லாம் பயப்படக்கூடிய ஆள் நான் கிடையாது.
இந்த நேரத்துல என்னுடைய கைதை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த முன்னோடிகள், கழக உடன்பிறப்புகள் பல இடங்கள்ல மறியல் செஞ்சு, ஆர்ப்பாட்டம் செஞ்சு கைது செய்யப்பட்டிருக்காங்க. அவங்க என் மீது வச்சிருக்கக்கூடிய அந்த அன்புக்கும் பாசத்திற்கும் நான் தலை வணங்குகிறேன். அவங்களை எல்லாம் விரைவில விடுதலை செய்யணும்னு நான் இந்த அரசை வற்புறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.
எங்களுடைய தலைவர்கள், எங்களுடைய பொதுச்செயலாளர், எங்களுடைய தலைவர், முதன்மை செயலாளர், என்னுடைய வழக்கறிஞர் அணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் என் கூட இருந்தாங்க. அவங்களுக்கு இந்த நேரத்துல என்னுடைய நன்றியை நான் தெரிவிச்சுக்கிறேன்.
“என்னுடைய கூட்டணி கட்சி தலைவர்கள், அவங்க வந்து இந்த கைதை புரிஞ்சுக்கிட்டாங்க… ஏன்னா என்னுடைய கூட்டணி கட்சி தலைவர் அனைவரும் நேற்று என்னோடு அந்த கூட்டத்தில என் கூட பங்கேற்று அவங்களும் சிறப்புரை ஆற்றுனாங்க. அவங்கெல்லாம் தான் சாட்சி நான் பேசுனதுக்கு!
அவங்களும் இந்த கைது முயற்சியை வன்மையா கண்டிச்சிருக்காங்க. எனக்கு இருக்கக்கூடிய ஒரே வருத்தம், சில தலைவர்கள் நான் பேசுனதை முழுசா கேட்காமலோ, பார்க்காமலோ, தீர ஆராயாமலோ ‘நான் தவறா பேசிட்டேன்’ அப்படின்னு கண்டனம் தெரிவிச்சிருக்காங்க. அது எனக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கு.
நான் எந்த நேரத்திலயும் அந்த மாதிரி தவறான எண்ணத்தில நான் பேசவே இல்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுனதுக்காக இந்த தரங்கெட்ட அரசு கைது செஞ்சிருக்காங்க. நான் மீண்டும் சொல்றேன்… இந்த கைதுக்கு நான் பயப்பட மாட்டேன். இன்னும் 100 முறை பேசுவேன், மீண்டும் பேசுவேன்!
அதுல சில பேர் சொல்லி இருக்காங்க, ‘நான் ரெட்டை அர்த்தத்துல பேசிட்டேன், டபுள் மீனிங்ல பேசிட்டேன்’ அப்படின்னு சொல்லிருக்காங்க. நான் நிச்சயமா டபுள் மீனிங்ல எல்லாம் பேசவே இல்ல! நான் ஒரே மீனிங்ல தான் பேசுனேன், சிங்கிள் மீனிங்ல தான் பேசுனேன்! மீண்டும் பேசுவேன்!
கடந்த கால ஆட்சிகள்ல அரசு எடுத்த முயற்சியினால, எங்களுடைய தலைவர் எடுத்த முயற்சியினால காவேரியில தண்ணீர் திறந்து விடப்பட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் வந்திருக்கு.
இந்த முறை தண்ணீர் வரல. காவேரிக்கு தண்ணீர் வரணும்… இதைத்தான் நான் பேசுனேன், இதை மீண்டும் மீண்டும் நான் பேசுவேன்! எனவே இந்த மாதிரி பொய் வழக்குகளுக்கு எல்லாம் பயப்பட போறதில்லை. இத சட்ட ரீதியா சந்திக்க நான் தயாராக இருக்கின்றேன்.” என்று கூறினார்.
கரூர் சம்பவத்தை குறிப்பிட்டு, ”NO.1 ஓடுகாலி முதலமைச்சர்” என்றும் கடுமையாக விமர்சித்தார் உதயநிதி ஸ்டாலின்.
