நடிகைகள் திரிஷா, ராதிகா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் இணைந்து உளவியல் திகில் திரைப்படத்தில் நடிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக நடிகை திரிஷா லண்டனில் இருந்து வருகிறார். அவர் லண்டனில் இருப்பது தொடர்பான புகைப்படமும் இணையத்தில் வெளியாகி பல்வேறு ரூமர்களை கிளப்பியது.
இந்த சூழலில் அவர் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
இயக்குனர் ராஜா கிருஷ்ணன் மேனன் தமிழில் உளவியல் திகில் படத்தை எடுக்கிறார். இந்த படத்தில் நடிகைகள் திரிஷா, ராதிகா சரத்குமார், அபர்ணா பால முரளி ஆகியோர் நடிக்கின்றனர்.
இதற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

இந்த படத்தை பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இதன் மூலம் தமிழிலும் இந்த நிறுவனம் அறிமுகமாகிறது. இந்த நிறுவனத்துடன் லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
ஏர் லிப்ட், செஃப் மற்றும் பிப்ஃபா போன்ற படங்களுக்கு பெயர் பெற்ற ராஜா கிருஷ்ணன் மேனன் எடுக்கும் இந்த திகில் திரைப்படம் அவருடைய முதல் தமிழ் திரைப்படம் ஆகும்.
இது முழுக்க முழுக்க பெண்களை மையமாக கொண்ட கதை என்று பட குழு தரப்பில் கூறப்படுகிறது.
ராதிகா, திரிஷா, அபர்ணா என முன்னணி நடிகைகளுடன் பணியாற்றுவது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்துவதாக இயக்குனர் ராஜா கிருஷ்ணன் மேனன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
