தேர்தல் எதிரொலி: வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடல்

Published On:

| By Pandeeswari Gurusamy

Election

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை ஏப்ரல் 23ம் தேதி காலை தொடங்க உள்ள நிலையில் கோவை குற்றாலம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்தை தடைவிதித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று மாலை 6 மணியுடன் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்துள்ளது. 5.73 கோடி வாக்காளா்கள் வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் 75 ஆயிரத்து 32 வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளன. தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவு என்ற இலக்குடன் தேர்ல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகைகளை மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் 3,563 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 27 லட்சத்து 44 ஆயிரம் வாக்காளர்கள் கோவை மாவட்டத்தில் வாக்களிக்க இருக்கின்றனர். இந்நிலையில் வாக்குப்பதிவு நாளான நாளை கோவை குற்றாலம் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக வனத்துறை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் வகையில் வியாழக்கிழமை (ஏப்.23) ஒரு நாள் மட்டும் கோவை குற்றாலம் அருவி மூடப்படுகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று வெள்ளியங்கிரி மலைக்கு புதன்கிழமை மாலை 6 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ADVERTISEMENT

நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை(ஏப்.24) வழக்கம் போல் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்லலாம், இந்த உத்தரவை மக்கள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட நேரத்தில் கோவை குற்றாலம் அருவி, வெள்ளியங்கிரி மலைக்கு மக்கள் யாரும் செல்ல முயற்சி செய்ய வேண்டாம்.

ADVERTISEMENT

இந்த தடை மீறி குற்றாலம் அருவி, வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் செல்வதை தடுக்க வனத் துறையின் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் யானை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனா்.

வனத் துறையின் தடையை மீறி தடைசெய்யப்பட்ட வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைபவா்கள் மீது இந்திய வனப் பாதுகாப்புச் சட்டப்படி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி கொடைக்கானல்

இதேபோல் கொடைக்கானலைச் சுற்றியுள்ள தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம், பேரிஜம் ஏரி போன்ற சுற்றுலாத் தலங்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஊட்டி மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்கள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share