டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

top ten news today in tamil september 30 2023

பஞ்சாயத்து விவசாயிகள் கலந்துரையாடல்!

மூன்றாயிரம் பஞ்சாயத்து நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று‌ (செப்டம்பர் 30) டெல்லியில் துவக்கி வைக்கிறார்.

ADVERTISEMENT

ரூ.2000 நோட்டு மாற்ற கடைசி நாள்!

ரூ.2000 நோட்டுக்களை பொதுமக்கள் மாற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

ADVERTISEMENT

உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மனுத்தாக்கல்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு இன்று மனுத்தாக்கல் செய்கிறது.

ADVERTISEMENT

எம்.எஸ்.சுவாமிநாதன் இறுதி ஊர்வலம்!

மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் இன்று காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட உள்ளது.

நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்!

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்!

காவிரி எங்கள் உரிமை என்ற முழக்கத்துடன் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 497-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்தியா, இங்கிலாந்து மோதல்!

ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

கிச்சன் கீர்த்தனா: தினை கேசரி

எம்.ஜி.ஆரும் அண்ணாமலையாரும்…: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share