எம்.ஜி.ஆரும் அண்ணாமலையாரும்…: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

எம்ஜிஆரோட வலது கை கொடுக்குறது இடது கைக்கு தெரியாதாம்… அந்த அளவுக்கு ரகசியமா பல பேருக்கு உதவியிருக்காராம்… ஆனா நம்ம அண்ணாமலையார் அதை விட மிஞ்சிட்டாரப்பா… வலது கையில அடிபட்டதுக்கு இடது கையில பிளாஸ்திரி ஒட்டிக்கிறதை பாத்தீங்களா…அப்படினு நம்ம ஃபிரண்டு இன்ஸ்டாகிராம்ல வீடியோவை காமிச்சு பயங்கரமா பொங்குனாரு…

அதுக்கு நம்ம இன்னொரு தோஸ்து, ‘அட… அண்ணாமலை விவகாரமா? அத வலது காதுல வாங்கி இடது காது வழியா வெளிய விட வேண்டியதாச்சே?’ அப்படினு அசால்ட்டா கமெண்ட் அடிச்சுட்டு வேலைய பாக்க போயிட்டாரு.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க


Kirachand
அதிமுகவின் தலைமையை பாஜக மாற்றச் சொன்னால் அதிமுகவினர் ஏற்பார்களா? – ஓபிஎஸ்
இதில் அதிமுக தலைமையை மாற்றணும் எனும் உங்க ஆதங்கமும் இருக்குதானே?

ச ப் பா ணி
ஓடாத வண்டி ஒர்க் ஷாப்புக்கு போகும். உழைக்காத உடம்பு ஆஸ்பத்திரிக்கு போகும்
-கேட்டது

கோழியின் கிறுக்கல்!
தோன்றும் போது நம்முடன் பேசுறவனை நம்பலாம்,
தேவைக்கு பேசுறவனை கூட நம்பலாம்,
ஆனா Bore அடிக்குதுன்னு பேசுறவனை மட்டும் அடிச்சு பத்தி விட்டுடணும்!!

சாணக்கியன்
2024 தேர்தலில் பாஜக மிகப்பெரிய அளவில் கூட்டணி அமைத்து போட்டியிடும் – எச்.ராஜா
நோட்டா உடன் தானே…அது தான் எங்களுக்கு தெரியுமே..

ஜோ..
ரஜினிகாந்த் அறிக்கை விட்டுருக்கார்..
~ நேத்து பிரச்சினை நடந்த, சித்தார்த்துக்கு ஆதரவா வா?
இல்ல, சந்திரமுகி 2 படத்துக்கு ஆதரவா விட்டுருக்கார்..

balebalu
இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங்க் சேவை – செய்தி
எந்த லிங்க் வந்தால் என்ன
நம்ம ஊர் பேங்க் மட்டும் திருந்தவே திருந்தாது
பாழாய்ப்போன BSNL வைத்து கொண்டு நெட் வரல்லை ன்னு காலமெல்லாம் புலம்பிகிட்டு இருப்பாங்க

லாக் ஆப்

டிஜிட்டல் திண்ணை: ஒண்ணே ஒண்ணுதான்?! வைகோ, திருமாவை அதிர வைத்த ஸ்டாலின்

சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விபத்து : ஒருவர் பலி!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel