தமிழக வெற்றிக் கழக கொடி வண்ணத்தில், அரசு போக்குவரத்து கழகத்தின் செயலி மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைந்தது முதல் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
முக்கியமாக கடந்த ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன.
போக்குவரத்து துறையை பொறுத்தவரை பழைய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
சமீபத்தில் புதிய பேருந்து ஒன்றுக்கு தமிழக வெற்றி கழக கொடி நிறத்தில் வண்ணம் அடிக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்த சூழலில் தமிழக அரசின் போக்குவரத்து கழக செயலியான டிஎன்எஸ்டிசி செயலியும் தமிழக வெற்றி கழக கொடி வண்ணத்தில் மாற்றப்பட்டுள்ளது.
சிவப்பு, மஞ்சள் நிறத்தில் இடது பக்கம் முதல்வர் புகைப்படமும் வலது பக்கம் போக்குவரத்து கழக இலட்சினையும் இடம்பெற்றுள்ளது.
ஆனால் தற்போது வரை டிஎன்எஸ்டிசி இணையதள நிறம் மாற்றப்படவில்லை.
