முதல்வர் விஜய் அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் செவிலியர்கள் இன்று ஆகஸ்ட் 6-ந் தேதி பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டில் 7 அரசு மருத்துவ கல்லூரிகளில் பணிபுரிந்த 210 செவிலியர்கள் திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு செவிலியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று 3-வது நாளாக தமிழகம் முழுவதும் 1 மணி நேரம் பணிப் புறக்கணிப்பு செய்து செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதும் செவிலியர்களின் கோரிக்கை. தங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று செவிலியர்கள் அறிவித்துள்ளனர்.
