முதியோர் இல்ல கரண்ட் பில் ரூ.4,39,743.. புகாருக்கு பின்னரும் “ஷாக்” தந்த மின்வாரியம்!

Published On:

| By Mathi

Shocking Electricity Bill of ₹4,39,743 for Old Age Home

காரைக்குடியில் முதியோர் இல்லத்துக்கு இரு மாதங்களுக்கான மின் கட்டணம் ரூ4,39,743 செலுத்த வேண்டும் என மின்வாரியம் தெரிவித்ததால் நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

காரைக்குடி பர்மா காலனி, தாமரை வீதியில் செயல்பட்டு வருகிறது டிராப்ஸ் முதியோர் இல்லம் (DROPSS OLD AGE HOME). இந்த முதியோர் இல்லம் செலுத்த வேண்டிய மின் கட்டணம் ரூ4,39,743 என மின்வாரியம் தெரிவித்தது.

ADVERTISEMENT

இதனால் முதியோர் இல்ல நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த முதியோர் இல்லத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் ரூ.6,335; ஏப்ரல் மாதம் ரூ 7,274 மின் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது ரூ.4,39,743 செலுத்த வேண்டும் என மின்வாரியம் அனுப்பிய தகவலால் முதியோர் இல்ல நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து தவறு நடந்ததாக ஒப்புக் கொண்ட மின்வாரிய அதிகாரிகள் தற்போது அபராதத்துடன் ரூ15,020 கட்டணம் செலுத்த வேண்டும் என அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக முதியோர் இல்லத்தை தொடர்பு கொண்டு நாம் பேசிய போது, ”ரூ4 லட்சத்துக்கும் அதிகமாக மின் கட்டணம் செலுத்த வேண்டும் என சொல்லப்பட்டது பற்றி புகார் கொடுத்தோம். இப்போது ரூ15,020 கட்ட சொல்கின்றனர். முதியோர் இல்லத்துக்கு இதுவரை மிக அதிகமாக ரூ.7,459 தான் மின் கட்டணம் செலுத்தி இருக்கிறோம். ஆனால் தற்போது அதை போல 2 மடங்கு கட்டணம் செலுத்த சொல்கிறார்கள்.. இதை பற்றியும் மீண்டும் புகார் கொடுக்க இருக்கிறோம்” என வேதனையுடன் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share